விசாரணைக் கைதிகளை விடுவிக்கும் விவகாரம்: நீதித்துறைக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
டெல்லி: குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், அதிகபட்ச தண்டனையில் பாதி அளவை அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுதலை செய்ய, அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அதிரடி உத்தரவின் எதிரொலியாக, நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில், மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச்சாட்டுகள் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பல ஆண்டுகளாக உள்ள வெளிநாட்டுக் கைதிகள் சார்பில் தொடரப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவின் முக்கிய அம்சம்:
ஒருவர் தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல், பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்து வரும் சூழலில், ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருந்தால் விதிக்கப்படும் அதிகபட்ச தண்டனையில் பாதி அளவை ஏற்கெனவே அனுபவித்திருந்தால், அந்த விசாரணைக் கைதியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கி அடுத்த 2 மாதங்களுக்குள், நாடு முழுவதும் உள்ள சிறைகளில் சட்ட அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விடுவிக்க தகுதியான விசாரணைக் கைதிகளை அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து, தீர்ப்பு வழங்குவதற்கான செயல் திட்டத்தை, தங்கள் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றில் தேக்கநிலை நிலவுவதாக கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், நீதித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 4 லட்சம் விசாரணைக் கைதிகள் பல்வேறு சிறைகளில் அடைப்பட்டிருக்கின்றனர். இவர்களில், 2.5 லட்சம் பேர் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே பல ஆண்டுகள் சிறையில் உள்ளனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications