For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரிலையன்ஸ் ஜியோ சாட் அப்ளிகேஷன் சீனாவுக்கு டேட்டா அனுப்புகிறது: ஹேக்கர் குழு குற்றச்சாட்டு

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் சாட் அப்ளிகேஷனை பயன்படுத்துவோரின் தகவல்கள் சீன சர்வருக்கு செல்வதாக அனானிமஸ் இந்தியா என்ற ஹேக்கர்கள் குழு தெரிவித்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய(டிராய்) இணையதளத்தை கடந்த ஏப்ரல் மாதம் அனானிமஸ் இந்தியா என்ற ஹேக்கர்கள் குழு ஹேக் செய்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் சாட் அப்ளிகேஷனை பயன்படுத்துவோரின் தகவல்கள் சீன சர்வருக்கு செல்வதாக அனானிமஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

ஜியோ அப்ளிகேஷனை சீனாவில் உள்ள டெவலப்பர்கள் உருவாக்கியதாக அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் மொபைல் டேட்டா ரிலையன்ஸ் ஜியோ அப்ளிகேஷன் மூலம் சீனா சென்றுள்ளதாக அனானிமஸ் இந்தியா கூறியுள்ளது.

இது குறித்து அந்த குழு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

அன்க்ரிப்டட் டேட்டா சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏன் ரிலையன்ஸ் ஏன்? #OpStopReliance
http://who.is/whois/poc.gongsunda.com ...

இந்த அப்ளிகேஷன் ஒன்று சீனாவில் உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது ரிலையன்ஸ் என்ஜினியர்களுக்கு சீன மொழியில் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்

#OpStopReliance https://twitter.com/opindia_revenge/status/610491633864417280 ... என்று தெரிவித்துள்ளது.

அனானிமஸ் இந்தியாவின் குற்றச்சாட்டை ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

English summary
Anonymous India hacker group has told that Reliance Jio chat app is sending mobile data to China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X