ரூ.4,000 க்கும் குறைவான விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்கள்!! அடுத்த கோதாவில் இறங்குகிறது ரிலையன்ஸ்!!!
மும்பை : வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் ரூ.4 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் 4G சேவையை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நெட்வொர்க் கவரேஜை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

தொலைதொடர்பு துறையில் 4-ம் தலைமுறை தொழில்நுட்பமான 4G
சேவையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் துவங்க இருப்பதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.
மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் ரூ.4,000 க்கும்
குறைவான விலையில் செய்திகள், தொலைக்காட்சிகள், வீடியோக்கள் உள்பட ஏராளமான வசதிகள் கொண்ட 4G சேவையை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கேபிள் சேவைகளில் ஈடுபட ரிலையன்ஸின் தொலைத் தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும்,. பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வங்கிச் சேவைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications