தேங்காய் உடைச்சு சாமி கும்பிட்டு விட்டு பூட்டை உடைத்து ஆட்டையைப் போடும் நூதன திருட்டுக் கும்பல்!
மும்பையில் திருட போகும் முன்பு அந்த வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு திருடும் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video

மும்பை: தேங்காய் உடைத்துவிட்டு சாமி கும்பிட்டு வீடுகளில் திருடும் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
எந்த தொழிலை செய்தாலும் பக்தியுடன் செய்ய வேண்டும் என்பதும் கடவுளை வணங்கிவிட்டு தொடங்க வேண்டும் என்பதும் தொன்று தொட்டு வரும் நடைமுறையாகும். ஆனால் மும்பையில் வீடு புகுந்து திருடும் கும்பல் திருட்டு தொழிலை சாமியாக பாவித்ததில்லாமல் அதை அந்த கும்பலின் கோட் வேர்டாகவே பயன்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை, தாணே, கல்யாண், முலுண்ட், தோம்பிவிலி ஆகிய பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளில் அவ்வப்போது திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பூஜை நடத்தி திருட்டு
அண்மையில் ஒரு வீட்டில் நடைபெற்ற திருட்டு குறித்து விசாரணை நடத்த சென்றனர். அப்போது அந்த வீட்டின் வாசலில் தேங்காய் உடைத்து, பூ, மஞ்சள் பை, பழம் வைத்து பூஜை நடத்தப்பட்டிருந்தது. இது போல்தான் ஏற்கெனவே ஒரு வீட்டு வாசலில் நடைபெற்றது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த பூஜை விவகாரத்தை போலீஸார் தங்களுக்கு கிடைத்த துப்பாகவே நினைத்தனர்.

பூஜை செய்த திருடர்கள்
இதையடுத்து நீண்டநாட்களாக பூட்டியிருந்த ஒரு வீட்டு வாசலில் பூஜை நடத்தப்பட்டிருந்தது. அதுவும் பூக்கள் பிரஷ்ஷாக இருந்தது. இதை ஏற்கெனவே நடந்த சம்பத்துடன் தொடர்புபடுத்தினர். இதனால் போலீஸார் உஷாராக திருடர்கள் செல்வதற்கு முன்பே அங்கு சென்றனர். அப்போது திருட வந்த நிர்மான் ஆர்மோகம் ஷெட்டி (25), சக்திவேல் நிர்மல் (41), பிரவீன் பீம்ராவ் கெய்க்வாட் (25), யஷ்வந்த் பாபன் மோகிதே (20) உள்ளிட்டோரை கைது செய்தனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்த அய்யப்பா நாராயண், ரோஹித் சசிகாந்த் ஷேவாலே மற்றும் ஹிமான்ஷூ ஆகியோரை தேடி வருகின்றனர்.

ஆயுதங்கள் பறிமுதல்
திருடர்களிடம் இருந்து 4 கத்திகள், இரு ஸ்கூரு டிரைவர்கள்கள், 4 சாவிகள், இரு குல்லாக்கள், தேங்காய், பூக்கள், ஸ்பேனர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இதுகுறித்து அந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் திடுக் தகவல்கள் கிடைத்தன.

திருடும் கும்பல்
ஒரு கும்பலை சேர்ந்தோ வீதிவீதியாக சென்று நீண்ட நாட்கள் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவர். பின்னர் அந்த வீட்டருகே தேங்காய் உடைத்து பூக்களை தூவி பூஜை செய்துவிட்டு வருவர். இந்த பூஜை அயிட்டங்கள் எந்த வீட்டின் முன்பு இருக்கிறதோ அந்த வீட்டுக்கு மற்றொரு கும்பல் திருட செல்வர். இவ்வாறு நூதன முறையில் திருடும் பணத்தை இரு கும்பலும் பங்கு போட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications