சேலம், நாமக்கல் தொகுதிகளில் 2 வாக்குச் சாவடிகளில் 8ம் தேதி மறு வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சேலம் மற்றும் நாமக்கல் லோக்சபா தொகுதிகளில் 2 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் 8ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 24ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்போது 2 தொகுதிகளில் 2 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
நாமக்கல் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் அருகே கோட்டப்பாளையம் மற்றும் சேலம் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியிலும் இந்த மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications