சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்டம்தான்.. பாஜகவுக்கு இடி.. ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு
ராய்ப்பூர்: 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. சத்தீஷ்கர் மாநிலத்தில் பாஜகவுக்கு இந்த தேர்தலிலும் ஏமாற்றமே மிஞ்சும் என ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்பு முடிவு கூறியுள்ளது.
90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் கடந்த நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 74 சதவிகிதத்திற்கு மேலாக வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. சத்தீஷ்கரை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார்.

சத்தீஷ்கரில் கடந்த 2018 ஆம் ஆண்டுவரை பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், கடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. இதனால், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக பல்வேறு வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைப்பத்தில் மும்முரம் காட்டியது. இதனால், சத்தீஷ்கரில் ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் பாஜக 14 இடங்களில் வெற்றி பெற்றது. பிற கட்சிகள் இதர இடங்களில் வென்றன. இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்காக இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களும் சத்தீஷ்கரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதன்படி, சத்தீஷ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியே அமையும் எனவும் பாஜக தோல்வியடையும் என்றும் ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, காங்கிரஸ் கட்சி 44-52 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாஜக 34-42 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சத்தீஷ்கரில் மொத்த தொகுதிகள்: 90
பெரும்பாண்மைக்கு - 46
காங்கிரஸ்: 44-52
பாஜக: 34 -42
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications