சட்டம் ஒழுங்கு பாதிப்பதால் ஜெ. வழக்கை தமிழகத்துக்கு மாற்றுக: கர்நாடக ஹைகோர்ட்டில் கோரிக்கை தாக்கல்
பெங்களூர்: ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும், அடுத்தகட்ட விசாரணை அங்கே நடக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் சட்ட பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 வருட சிறை தண்டனை அளித்த பிறகு அதிமுக தொண்டர்கள் பலரும் பெங்களூரில் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி என்ற அமைப்பின் சார்பில் அதன் தலைவி பார்வதி ரெட்டி, இன்று கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி ரெட்டி அளித்த பேட்டி:
ஜெயலலிதா வழக்கு விசாரணை காரணமாக கர்நாடக ஹைகோர்ட்டில் மூச்சு முட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதிமுகவினர் வந்து குவிவதால் வழக்கமான கோர்ட் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வக்கீல்கள், மனுதாரர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளது.
ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள சிறை, மற்றும் ஹைகோர்ட் வளாகத்திலும் அதிமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டம் யாருக்கு எதிராக? நீதிபதிக்கு எதிராகவா அல்லது நீதிமன்றத்துக்கு எதிராகவா? யாருக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதை சொல்ல முடியுமா?
கர்நாடக மாநில வக்கீல்கள் இதுவரை எந்த வழக்கிலாவது போராட்டம் நடத்தியுள்ளனரா? அதிமுகவினர் யார் இங்கு வந்து போராட? எனவே பெங்களூரில் ஜெயலலிதாவை வைத்திருக்கும் அவசியம் நமக்கு இல்லை. கர்நாடகாவில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எனவே அதிமுகவினர் சும்மா இருந்தால் பரவாயில்லை. போராட்டம் நடத்துவதால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது.
பெங்களூரில் வந்து அதிமுகவினர் மொட்டை அடித்து போராட்டம் நடத்துகிறார்கள். இது நமது மாநிலத்துக்கு நல்லதல்ல. கர்நாடகாவில் இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் சிறையில் இருந்தனர். ஆனால் எந்த போராட்டமும் நடக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. கர்நாடகாவில்தான் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. காவிரியால் ஏற்கனவே தமிழர், கன்னடர் பிரச்சினை ஏற்பட்டது. ஜாமீன் கிடைக்கவில்லை என்றால் அதிமுகவினர் அமைதியை கெடுப்பார்கள் என்று சந்தேகம் உள்ளது. எனவே ஜெயலலிதாவை தமிழகத்துக்கு மாற்றுங்கள், வழக்கையும் தமிழகத்துக்கு மாற்றுங்கள் என்று கோரிக்கைவிடுத்துள்ளோம்.
நீதிபதியிடம் கலந்தாலோசிப்பதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறு பார்வதி ரெட்டி கூறினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications