சக்திமான் குதிரைக்கு இரங்கல் தெரிவித்த கோஹ்லி.. கடுப்பில் பாஜக
மும்பை: உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ தாக்குதலால் உயிரிழந்த போலீஸ் குதிரை சக்திமான் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று, கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி அஞ்சலி தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, காவல் துறையைச் சேர்ந்த சக்திமான் குதிரையை பாஜக எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தாக்கி காலை உடைத்ததாகப் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜோஷி பின்னர் ஜாமீனில் விடுதலையானார். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்பட்டது. இத்தாக்குதலில் குதிரை சக்திமானின் இடது பின்னங்கால் உடைக்கப்பட்டது.
Rest In Peace, you innocent soul #Shaktiman. We, humans, failed you.
— Virat Kohli (@imVkohli) April 21, 2016
குதிரை எழுந்து நிற்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குதிரையின் கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டது. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் குதிரைக்கான செயற்கை காலை தானமாக வழங்கினார். இந்நிலையில், நேற்று குதிரை சக்திமான் இறந்ததாக அதை பராமரித்து வந்த போலீஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விராட் கோஹ்லி இன்று தனது டிவிட் ஒன்றில், "அப்பாவி சக்திமான் உனது ஆத்மா சாந்தியடையட்டும். மனிதர்களாகிய நாங்கள் உனக்கு தவறிழைத்துவிட்டோம்" என்று கூறியுள்ளார்.
இது உத்தராகண்ட் மாநில பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
"8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்! -
இனி விராட் கோலியே அவுட்டானாலும் கவலை இல்லை.. பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் ரஜத் பட்டிதார் இருக்காரு! -
Vastu Secrets: வீட்டில் 7 குதிரை படம் வைத்தால் என்ன பலன்?.. வாஸ்து சொல்லும் ரகசியங்கள்! -
33 பந்தில் 93 ரன்கள்.. மனுஷன் மாதிரியா அடிச்ச.. குஜராத் பவுலர்களை கதறவிட்ட ரஜத் பட்டிதார்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications