5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து தவறாக நடந்தார் நீதிபதி ஏ.கே.கங்குலி- சட்ட மாணவி
டெல்லி: டெல்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி என்று அவர் மீது பாலியல் புகார் சாட்டியுள்ள சட்ட மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக கங்குலி இருந்தபோது அவரிடம் பயிற்சிக்காக வந்தவர் இந்த மாணவி. அப்போது தன்னிடம் நீதிபதி கங்குலி தவறாக நடந்து கொண்டதாக தனது பிளாக்கில் எழுதியிருந்தார் இந்த மாணவி.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த குழு, நீதிபதி கங்குலியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது. மாணவியும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவி தனது வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது...

அடிக்கடி ஹோட்டலுக்கு வரச் சொன்னார்
நீதிபதி ஏ.கே.கங்குலி என்னை டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அடிக்கடி வருமாறு நிர்ப்பந்தித்தார். தனக்கு உதவியாக இருக்குமாறு அவர் கேட்டார். அப்போது அவர் மோகன் பகான், ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியின்போது நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட கமிட்டியின் தலைவராக இருந்து வந்தார்.

ஒயின் கொடுத்தார்
ஒருமுறை நான் அவரது அறைக்குப் போனபோது, அங்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன அதிகாரிகள் இருந்தனர். நான் வந்ததும் அவர்கள் கிளம்பிச் சென்றனர். பின்னர் என்னை அமருமாறு கூறிய நீதிபதி கங்குலி என்னிடம் ஒயினை கொடுத்தார். அது டிசம்பர் மாதம். என்னிடம் ஒயினைக் கொடுத்த அவர் கிறிஸ்துமஸ் காலத்தில் ஒயின் குடிப்பது சம்பிரதாயம் என்று அவராகவே விளக்கம் கொடுத்தார்.

நடத்தை சரியில்லை
அவரது பேச்சும், நடத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை. அதை அவரிடம் மறைமுகமாகவும், நேரடியாகவும் குறிப்பிட்டேன். இருப்பினும் அவர் அத்தோடு நிற்கவில்லை. என்னிடம் தவறாகவும் நடக்க முயன்றார். இதையடுத்து நான் அறையை விட்டு வேகமாக வெளியேறி விட்டேன்.

லாபி வரை வந்து மன்னிப்பு கேட்டார்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் என் பின்னாலேயே வந்தார். லாபி வரை வந்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்டபடியே உடன் வந்தார்.

ஆதாரம் இருக்கிறது
நீதிபதி மீது நான் கூறும் புகாருக்கு ஆதாரம் உள்ளது. ஆதாரத்துடன்தான் நான் புகார் கூறுகிறேன் என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

விரிவான விசாரணை
இந்த விசாரணையை நீதிபதிகள் லோதா, தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய குழு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications