For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாகா எல்லையில் இந்திய வீரர்களின் அதிரடி அணிவகுப்பு! வந்தேமாதரம் கோஷத்துடன் மக்கள் கண்டுகளிப்பு

By Veera Kumar
Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இன்று கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்முறையாக ராணுவ பிரிவை சேர்ந்த பெண் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப்பின் அமிர்தரசரஸ் அருகே அமைந்துள்ளது வாகா பகுதி. இங்கு மாலையில் இரு நாட்டு தேசிய கொடிகளும் இறக்கி வைக்கப்படும்போது, சல்யூட் அணிவகுப்பு நடைபெறும்.

Retreat ceremony at Wagah border

இந்தியாவின் 66வது குடியரசு தினமான இன்று, எல்லையிலுள்ள பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு, இந்திய வீரர்கள் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாலையில், கொடியிறக்கம் கோலாகலமாக நடந்தது.

முதல் முறையாக பெண் ராணுவ அதிகாரிகளும் அப்போது அணிவகுப்பு செய்தனர். நூற்றுக்கணக்கான இந்திய பொதுமக்கள், இதை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். கால்களை தோள் உயரத்திற்கு தூக்கி கீழே அடிக்கும் இந்த சல்யூட் நிகழ்ச்சியை நேரில் பார்த்த மக்கள் 'வந்தேமாதரம்' என்று கூறி கரகோசங்களை எழுப்பினர்.

English summary
As, India celebrates its 66th Republic Day, Barack Obama along with his wife today attends the Republic Day Parade who is the first US President to be the Chief Guest during Republic Day celebrations.In the evening retreat ceremony held at Wagah border
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X