கொல்கத்தா டாக்டர் கொலை! கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? சிபிஐ குற்றப்பத்திரிகையில் முக்கிய தகவல்
கொல்கத்தா: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில், இப்போது அதில் குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இருப்பினும், அவர்களின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது. அவர்கள் குற்றவாளியைக் காப்பாற்ற முயல்வதாக எல்லாம் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையைக் கொல்கத்தா ஐகோர்ட் சிபிஐ-க்கு மாற்றியது.
இதற்கிடையே சிபிஐ இப்போது இந்த கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனை சம்பவம் தொடர்பாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பிரதான குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக சிபிஐ இந்த குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா போலீசில் தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய் தான் இந்த படுகொலையைச் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பயிற்சி மருத்துவர் செமினார் ஹாலுக்கு தூங்கச் சென்றபோது இந்த கொடூரத்தை சஞ்சய் ராய் செய்துள்ளார்.
அதேநேரம் பயிற்சி மருத்துவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இதில் பலருக்குத் தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருப்பினும், கூட்டுப் பலாத்காரம் எதுவும் நடக்கவில்லை என்றும் சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தைச் செய்ததாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுமார் 200 பேரிடம் இருந்து வாக்குமூலம் பெற்று அந்த குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தயார் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
33 வயதான சஞ்சய் ராய், கொல்கத்தா போலீசார் கைது செய்யப்பட்டார். செமினார் ஹாலில் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவர் உடல் அருகே புளூடூத் சாதனம் கண்டெடுக்கப்பட்டது. அதை வைத்தே சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர். மேலும், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போதும் சஞ்சய் ராய் குற்றம் நடந்த போது மருத்துவமனையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
கைதான சஞ்சய் ராய் சில மூத்த கொல்கத்தா போலீஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.. இதனால் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை மறைக்க உள்ளூர் போலீசார் முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகையில் எந்தவொரு தகவலும் இருந்ததாகத் தெரியவில்லை.
அதேபோல குற்றம் நடந்த போது கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சந்தீப் கோஷுக்கு இந்த குற்றத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற ரேஞ்சில் எல்லாம் தகவல் பரவியது. இருப்பினும், அவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றே சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம் சந்தீஸ் கோஷ் ஏற்கனவே நிதி முறைகேடு மற்றும் ஆதாரங்களைச் சேதப்படுத்திய வழக்குகளில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications