59 போலி நிறுவனங்கள்... ரூ.6,172 கோடி மோசடி.. ரிக்ஷா ஓட்டியவர் ஒரே நாளில் கம்பெனி முதலாளி
டெல்லி: டெல்லியில் உள்ள சாந்தினி சவுக்கில் குடிசைப்பகுதியில் வசிக்கும் 59 பேரின் பெயரில் கம்பெனி தொடங்கி ரூ.6,172 கோடி வரை அந்நியச்செலவாணி மோசடியில் ஈடுபட்ட பேங்க் ஆப் பரோடா அதிகாரிகளை சிபிஐ கைது செய்து விசாரணை செய்து வருகிறது.
சாந்தினி சவுக் பகுதியில் சில தொழிலதிபர்கள், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தவர்கள், ரிக்சா ஒட்டுனர்கள், பேப்பர் போடுபவர்கள் என 59 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கி கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

குடிசைப் பகுதிகளில் வாழும் அவர்களிடம் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் தருவதாகக் கூறி மூளை சலவைச் செய்து அவர்களிடமிருந்து அடையாளச் சான்றிதழ்களை வாங்கி அதன் மூலம் போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். இந்த ஆவணங்களை வைத்து அவர்களது பெயரில் 59 போலி நிறுவனங்களைத் தொடங்கி அதன் பெயரில் பேங்க் ஆப் பரோடாவில் நிரந்தர வைப்புக் கணக்கு தொடங்கியுள்ளனர்.
அந்த கம்பெனிகளின் பெயரில் துபாய், மற்றும் ஹாங் காங் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், மேலும் அங்கிருந்து பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான வணிகத்தின் போது பொருட்களின் விலையை மூன்றிலிருந்து நன்கு மடங்கு உயர்த்தி கோடிக்கணக்கான ரூபாய் அந்நியசெலவாணியில் ஈடுபட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பண பரிவர்த்தனைக்கு பல்வேறு வங்கிகளில் கணக்குகள் தொடங்கப்பட்டு அந்த கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டு இறுதியாக அது பரோடா வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி விடப்படுகிறது.
இவ்வாறாக, தொழிலதிபர்களான குருசரண் சிங், சாந்தன் பாட்டியா, சஞ்சய் அகர்வால் உள்ளிட்டோர் பரோடா வங்கி அதிகாரிகளான எஸ்.கே.கார்க், மற்றும் ஜெநிஷ் துபே ஆகியோரின் உதவியுடன் கடந்த 2014- ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ரூ.6,172 கோடி அந்நியச்செலவாணி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மோசடியில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கப்ப்பிரிவு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications