டிவைடரில் மோதி.. தீப்பிடித்த கார்.. தலையில் ரத்தம்.. விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கார்.. அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: உத்தர்கண்டில் ஏற்பட்ட கார் விபத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Recommended Video

    விபத்தில் சிக்கிய Rishabh Pant.. தீ பிடித்து எரிந்த கார்

    இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடினார்.

    ஒருநாள், டி 20 போட்டிகளில் சொதப்பிய போதும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

    திரும்பினார்

    திரும்பினார்

    இந்த நிலையில் தொடர் முடித்து ரிஷப் பண்ட் நேற்று முதல்நாள் டெல்லி திரும்பினார். டெல்லியில் இருந்த ரிஷப் பண்ட் பல்வேறு பணிகளுக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். அங்கு ப்ரோமோஷன் பணிகள் மற்றும் பயிற்சி தொடர்பான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுள்ளார். அங்கு பல்வேறு ப்ரோமோஷன் பணிகளை முடித்த நிலையில் அவர் இன்று அதிகாலை டெல்லிக்கு திரும்பி உள்ளார். தனது பிஎம் டபிள்யூ காரில் அவர் டெல்லி நோக்கி வந்துள்ளார்.

    கார் விபத்து

    கார் விபத்து


    காரில் அவர் சென்று அந்நிலையில், இன்று காலை விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் பனி காரணமாக சாலை முழுக்க பனி மூட்டமாக இருந்துள்ளது. இதனால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் இருந்துள்ளது. டெல்லி உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை முழுக்க பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு சாலையில் உள்ள டிவைடர் எங்கே இருக்கிறது என்றும் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்துள்ளது.

    பனி மூட்டம்

    பனி மூட்டம்

    பண்ட் வந்தது பிஎம்டபிள்யூ கார் என்பதால் மிக வேகமாக வந்துள்ளது. இந்த நிலையில் கடும் பனிமூட்டம் காரணம் வேகமாக வந்த ரிஷப் பண்ட் கார் சாலை தடுப்பில் மோதி உள்ளது. காரை பண்ட்தான் ஓட்டி வந்துள்ளார். வேகமாக வந்த கார் சாலை தடுப்பில் படார் என்று மோதி உள்ளது. மோதியவுடன் காரில் இருந்து பண்ட் படுகாயத்துடன் கீழே இறங்கிஉள்ளார். கார் மோதிய வேகத்தில் உடனே எஞ்சின் தீ பிடிக்க தொடங்கி உள்ளது. ரூர்கி என்ற பகுதிக்கு அருகே கார் விபத்தில் சிக்கி இருக்கிறது.

    காயம்

    காயம்

    கார் மொத்தமும் வேகமாக தீ பிடித்துள்ளது. ஆனால் அதற்குள் பண்ட் காரில் இருந்து வெளியேறிவிட்டார். இதில் ரிஷப் பண்ட் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. சாலை தடுப்பு மீது கார் மோதிய நிலையில் உடனே கார் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இந்த சம்பவத்தில் ரிஷப் பண்ட் தலையில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரிஷப் பண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் முதலில் சாக்சம் என்ற மருத்துவமனையில் முதலுதவி பெற்று அதன்பின் டெஹடூனில் இருக்கும் மேக்ஸ் ஹாஸ்ப்பிட்டலில் பண்ட் சேர்க்கப்பட்டார். இவருக்கு தலையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கிரிக்கெட் ரசிகர்கள், பிரபலங்கள் பலர் இவர் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+