'மோடியை வெட்டி கூறு போட வேண்டும்' பேச்சு.. இம்ரான் மசூத்துக்கு ரீட்டா பகுகுணா ஆதரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட வேண்டும் என்று பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்துக்கு உ.பி. மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா ஆதரவு தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் சகாரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுபவர் இம்ரான் மசூத். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, உ.பி.யை குஜராத்தாக மாற்ற நினைத்தால் வெட்டி கூறுபோட்டுவிடுவோம் என்று இம்ரான் மசூத் பேசியதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் சகாரன்பூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ள இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனிடையே மூத்த காங்கிரஸ் தலைவரான ரீட்டா பகுகுணா, இம்ரான் மசூத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற ஒரு வாரம் உள்ள நிலையில் வேட்பாளரை மாற்றுவது என்பது சரியானதாக இருக்கிறது. இம்ரான் மசூத் பேசியதாக கூறப்படும் வீடியோ பேச்சு 10 மாதத்துக்கு முந்தையது. தமது பேச்சுக்கு அவரும் மன்னிப்பு கேட்ட பின்னரும் நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+