காங்கிரஸை கழற்றிவிடும் ஆர்ஜேடி..தேஜஸ்வி யாதவ் பரபர அறிவிப்பு! உற்று பார்க்கும் தொண்டர்கள்
பாட்னா: பீகாரில் இன்னுமே தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே உடன்பாடு ஏற்படவில்லை. தொகுதி உடன்படிக்கை பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகும் சூழலில், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.. அதாவது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 243 தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு- பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. ஜேடியு- பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

தேஜஸ்வி யாதவ்
இதற்கிடையே முசாபர்பூரில் உள்ள காந்தி என்ற பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மகாபந்தன் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், பீகாரில் உள்ள எல்லா 243 தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் என அவர் அறிவித்திருக்கிறார்.
எல்லா தொகுதிகளிலும் போட்டி
அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்த தேஜஸ்வி யாதவ், தனது தந்தையும் ஆர்.ஜே.டி தலைவருமான லாலு பிரசாத் யாதவின் சாதனைகளையும் பட்டியலிட்டார். அவர் மேலும், "நாங்கள் மீண்டும் வருவோம். இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், பீகாரில் உள்ள அனைத்து 243 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாகவே நினைத்துக் கொள்ளுங்கள்" என்று அவர் அறிவித்தார். முசாபர்பூர், போச்சாஹன், கைக்கட், காந்தி போன்ற தொகுதிகளைக் குறிப்பிட்ட அவர், தொண்டர்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தேஜஸ்வியின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெறுமன தொண்டர்களை உற்சாகப்படுத்தும் பேச்சு மட்டுமில்லை.. தேஜஸ்வி குறிப்பிட்ட முசாபர்பூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இருக்கிறார்கள். கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகச் சிக்கல்கள் இருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் தேஜஸ்வி இதுபோல பேசியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
பின்னணி
சமீபத்தில் மகாபந்தனின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து சமீபத்தில் கேட்டபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியான பதிலைத் தவிர்த்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் தேஜஸ்வியின் இந்த பேச்சை நாம் பார்க்கலாம்.. கூட்டணியின் தலைமைப் பதவிக்குத் தான் சரியான தலைவன் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலும் தேஜஸ்வி பேசியிருக்கிறார்.
காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விஐபி, ஜே.எம்.எம் மற்றும் எல்.ஜே.பி (பராஸ் பிரிவு) என மகாபந்தன் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் உள்ளன. அவை தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள போதிலும், இதுவரை பேச்சுவார்த்தை இறுதியாகவில்லை. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கேட்பதே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவ காரணமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கூட்டணியில் சிக்கல்?
இந்த சூழலில் தேஜஸ்வி 243 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் எனச் சொல்லியிருப்பது கவனம் பெறுகிறது. இதனால் அவர் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். ஆனால், இன்னொரு தரப்பினர் இது தேர்தலில் அதிக இடங்களைப் பெற பேரம் பேசும் உத்தியாகவும், ஆர்.ஜே.டி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியாகவும் மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறார்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications