மர்ம உறுப்பெல்லாம் காயம், வயிற்றில் பிளேடு: பெண்ணின் சடலத்தை பார்த்து மிரண்ட டாக்டர்
ரோதக்: ரோதக்கில் 28 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் போன்று கொடூரமாக பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தான் பார்த்ததே இல்லை என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ரோதக்கில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார் நோபாளத்தைச் சேர்ந்த 28 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண். இந்நிலையில் அவர் கடந்த 1ம் தேதி மாயமானார். இது குறித்து அவரது சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 4ம் தேதி அவர் ரோதக்-ஹிசார் நெடுஞ்சாலையோரம் உள்ள கிராமத்தின் வயலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அவர் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த வழக்கில் போலீசார் இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். 9வது குற்றவாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கைது செய்யப்பட்டவர்களில் நோபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபரும் அடக்கம்.
அந்த பெண்ணின் மர்ம உறுப்புகளில் பலத்த காயம் இருந்துள்ளது. அவரது வயிற்றில் கற்கள், பிளேடுகள் ஆகியவை இருந்தன. இது போன்ற ஒரு கொடூரத்தை தனது வாழ்நாளில் பார்த்தது இல்லை என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநில விவசாயத் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தான்கர் இறந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தான்கர் தெரிவித்தார்.
அப்பெண் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது டெல்லியில் நிர்பயாவுக்கு நடந்த கொடுமையை நினைவுபடுத்துகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications