ஊர் சுற்றாமல் ஒழுங்காக மக்கள் பிரச்சினைகளை சரி செய்யுங்கள்.. நாயுடுவுக்கு ரோஜா அட்வைஸ்
விசாகப்பட்டனம்: நாடு நாடு சுற்றுலா செல்வதை விட்டு விட்டு மக்கள் பிரச்சினைகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.
விசாகப்பட்டனம் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. மகளிர் சுய உதவி குழுவினரின் வங்கி கடன் ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுதவிர, ஊதிய உயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 அங்கன்வாடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதான் பெண்கள் மீது முதல்வர் காட்டும் மரியாதையா?
சிங்கப்பூர், மலேசியா, சீனா என அடிக்கடி முதல்வர் தனது அமைச்சர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கிறார். எதற்காக செல்கிறோம் என்று தெரியாமலேயே வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப் பணம்தான் வீணாகிறது.
வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா செல்வதை முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ரோஜா.












Click it and Unblock the Notifications