For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூபாய் நோட்டுகள் செல்லாது.. மத்திய அரசுக்கு மம்தா, கெஜ்ரிவால் 3 நாள் கெடு !

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு 3 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கெடு விதித்துள்ளனர்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோர் டெல்லியில் உள்ள அசத்புர் மண்டி பகுதியில் பேரணியாக சென்றனர். இருவர் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Roll back demonetisation decision in 3 days: Kejriwal, Mamata

அப்போது பேசிய மம்தா பானர்ஜி, "மோடி அறிவித்த இந்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை 3 நாட்களுக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் நாடு 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றுவிடும். இது போன்றதொரு அசாதாரண சூழ்நிலையை நெருக்கடி காலத்திலும் பார்த்ததில்லை.

வங்கியின் வரிசையில் நிற்கும் பொது மக்களுடன், மோடியும் நின்று பார்த்தால்தான் மக்களின் வலி என்னவென்று புரியும் என்றார் அவர். பின்னர் ரிசர்வ் வங்கிக்கு எதிரே நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய ஊழல் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் மக்கள் தங்களது சேமிப்புகளை வங்கியில் செலுத்தி அதில் கிடைக்கும் ரூ.10 லட்சம் கோடியை, மோடி தன்னுடைய கார்ப்பரேட் நண்பர்களுக்கு முதலீடாகக் கொடுத்துவிடுவார் என்றார். இதுவரை ரூபாய் நோட்டு பிரச்சனையால் நாடு முழுவதும் இதுவரை 40 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு யார் பொறுப்பு எனவும் கேள்வி எழுப்பினார். போராட்டத்துக்கு பின்னர், இரண்டு மாநில முதல்வர்களும் ரிசர்வ் வங்கி ஆளுனரை சந்தித்துப் பேசினர்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee along with her Delhi counterpart Arvind Kejriwal give Centre three days to roll back demonetisation of Rs.500 and Rs.1000 currency notes
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X