RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?
ஐபிஎல் 2021 சீசனின் 43ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 29, புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இதில் பெங்களூரு வெற்றி என்கிற ஒற்றை இலக்கோடு, ஓரணியாக மோதி ராஜஸ்தானை வென்றது.
டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் லெவிஸ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.
சரியான நேரத்தில் 31 ரன்களோடு யஷஸ்வியின் விக்கெட்டை வீழ்த்தி இந்த இணைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டேன் க்றிஸ்டின்.

5 பவுண்டரியுடன் மூன்று சிக்ஸர்களை விளாசி அதிரடி காட்டிக் கொண்டிருந்த எவின் லெவிஸின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தானின் அதிவேக ரன் குவிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தார் ஜார்ஜ் கார்டன். அப்போது ராஜஸ்தான் 11.1 ஓவர் முடிவில் 100 ரன்களுக்கு இரு விக்கெட்டை இழந்திருந்தது.
அதன் பிறகு வந்த அணித் தலைவர் சஞ்சு சாம்சன் உட்பட எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நின்று ரன்களைக் குவிக்கவில்லை. சஞ்சு சாம்சன் 19 ரன்கள் மற்றும் க்றிஸ் மோரிஸ் 14 ரன்களைக் குவித்ததே அதிகபட்ச ரன்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ராஜஸ்தானின் மிடிஸ் ஆர்டர் பேட்டர்களான மஹிபால் லோம்ரார், லியாம் லிவிங்ஸ்டன், ராகுல் தீவாட்டியா, ரியான் பராக் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு இழப்புக்கு 149 ரன்களை குவித்திருந்தது ராஜஸ்தான்.
முதல் இரு விக்கெட்டுகளை வீழ்த்தியது எந்த அளவுக்கு முக்கியம் என விளையாடியதோ, அதே வேகத்தோடு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தியது பெங்களூரு.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா போன்ற ஆபத்தான பேட்டர்களின் விக்கெட்டை ஒரே ஓவரில் வீழ்த்தி, பெங்களூரின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஹர்ஷல் படேல், இந்த முறையும் க்றிஸ் மோரிஸ் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தானை கட்டுக்குள் வைத்தார்.
யுவேந்திர சாஹல், ஷபாஸ் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பெங்களூரு அணி ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
150 எடுத்தால் வெற்றி
பெங்களூரு தரப்பில் களமிறங்கிய விராட் கோலி 25 ரன்களோடும், தேவ்தத் படிக்கல் 22 ரன்களோடும் பெவிலியம் திரும்பினர்.
சென்னைக்கு எதிரான போட்டியில் ஓப்பனர்கள் இருவரும் 110 ரன்களுக்கு மேல் அடித்துக் கொடுத்த பிறகு கூட, எந்த ஒரு பேட்டரும் நிலைத்து நிற்காமல் சீட்டு கட்டு போல சரிந்ததை பார்த்திருக்கிறோம்.
அப்படி இந்த முறையும் நடந்துவிடுமோ என பெங்களூரு ரசிகர்கள் அச்சத்தில் இருந்த போது, ஸ்ரீகர் பரத் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் கைகொடுத்தனர்.
அந்த ஜோடி, நிதானமாக ரன்களைக் குவித்து அணியை வெற்றி இலக்கை நோக்கி நகர்த்தினர். மேக்ஸ்வெல் 30 பந்துகளுக்கு 50 ரன்களைக் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரும் அடக்கம்.
- ஐபிஎல் 2021 - DC vs KKR : டெல்லியைத் தடுமாற வைத்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள்
- MI vs PBKS: பஞ்சாபை வென்று ப்ளே-ஆஃப் கனவை தக்க வைத்த மும்பை இந்தியன்ஸ்
பெங்களூரு அணி 17 பந்துகளுக்கு முன்பே தன் வெற்றி இலக்கை அனாயாசமாக அடைந்தது.
ராஜஸ்தான் அணியும் ஏழு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி இருந்தது. ஆனால் அது பெங்களூருவின் ரன் குவிப்பை தடுக்கவோ, விக்கெட்டுகளை வீழ்த்தவோ உதவவில்லை.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் மட்டுமே 3 ஓவர்களுக்கு 20 ரன்களைக் குவித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
க்றிஸ் மோரிஸ்ஸின் 4 ஓவர்களில் 50 ரன்கள் போனது. தொடக்க வீரர்களை வீழ்த்திய வேகத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை ராஜஸ்தான் வீழ்த்தவில்லை. க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் பரத் இணை வலுவாக நிலைபெற்று ரன்களை அடிக்கவிட்டது ராஜஸ்தான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமானது.
திரும்பி வந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஏப்ரல் 2020-ல் இந்த ஐபிஎல் சீசன் தொடங்கிய போது பெங்களூரு அணி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் என தொடர் வெற்றிகளைக் குவித்தது.
செப்டம்பர் மாதம் மீண்டும் போட்டிகள் தொடங்கிய போது கொல்கத்தாவிடம் தோல்வி, சென்னையிடம் தோல்வி என துவண்டிருந்த அணி, மும்பை இந்தியன்ஸை 54 ரன்கள் வித்தியாசத்தின் வீழ்த்தி தன்னை போட்டியில் நிலைநாட்டிக் கொண்டது.
நேற்று ராஜஸ்தானை வீழ்த்தி ஒரு அணியாக தன் ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைத்திருக்கிறது பெங்களூரு.
ஒரு சில பேட்டர்கள் மட்டுமே ரன்களைக் குவிப்பது, டாப் ஆர்டர் பேட்டர்கள் வீழ்ந்தால் மொத்த அணியும் சடசடவென சரிவது போன்ற பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து, டீம் ஸ்பிரிட்டோடு விளையாடத் தொடங்கியுள்ளனர்.
பிரத்யேகமாக மிடிஸ் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து பேட்டை சுழற்றத் தொடங்கியுள்ளனர். வரும் அக்டோபர் 3ஆம் தேதி பஞ்சாபையும், 6ஆம் தேதி ஹைதராபாத்தையும், 8ஆம் தேதி டெல்லியையும் எதிர்கொள்ளவிருக்கிறது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்.
கடந்த இரு போட்டிகளைப் போல வரும் போட்டிகளிலும் ஜொலிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
சீசனின் மத்தியில் தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு தற்பொது 11 போட்டிகளில் 7-ல் வென்று புள்ளிகள் பட்டியலில் 3ஆம் இடத்தை பிடித்திருகிறது. கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் 11 போட்டிகளில் 5-ல் வென்று 4 மற்றும் 5ஆவது இடத்தில் உள்ளன.
பிற செய்திகள்:
- இந்திய வழக்குகள்: மாநில அரசுகளை மத்திய அரசு விருப்பப்படி கலைக்க முடியாமல் போனது ஏன்?
- கஞ்சா கடத்தினாரா 'பிரபல' யூடியூபர்? 270 கிலோ மூட்டைகள் சிக்கியது எப்படி?
- புதிய ஜேம்ஸ்பாண்ட் படத்தைக் கொண்டாடும் விமர்சகர்கள்
- ஆப்கானிஸ்தான் படை விலக்கல் பற்றி ஜோ பைடன் பொய் சொன்னாரா?
- மோதியின் 'டிஜிட்டல் ஹெல்த் கார்டு' திட்டம் - நன்மைகளும், கவலைகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications