பட்ஜெட் 2018: வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த அருண்ஜெட்லி... பின்னணி தகவல்
கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2018 - 19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
Recommended Video

டெல்லி: விவசாய வளர்ச்சி, ஏழைகளுக்கு தரமான சுகாதார வசதி ஏற்படுத்துவது அரசின் நோக்கம் என்று உரையாற்றினார் அருண் ஜெட்லி. இந்த ஆண்டு விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
வரும் 2019ல் நாடு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இது கவர்ச்சி பட்ஜெட்டாகவோ, சலுகை பட்ஜெட்டாகவோ இருக்காது என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
குஜராத்தில் வாங்கிய அடியை பாஜக மறக்காத நிலையில், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை மனதில் வைத்தும் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைத்துறை பட்ஜெட்
நாடுமுழுவதும் கடந்த பல மாதங்களாகவே விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்று நிர்வாண போராட்டம் கூட நடத்தினர். இதை மனதில் வைத்து, விவசாயிகள் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமையலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதே போலவே இந்த பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன்வளம் கால்நடைத்துறை
கிசான் கிரெட்டி கார்டு வசதியை மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு விரிவாக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு 10ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ரூ. 11 லட்சம் கோடி கடன் இலக்கு
2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டம், மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் பதப்படுத்தும் தொழில்
இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் கட்டமைப்பு வசதி
விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாசன திட்டங்களுக்கு ரூ2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் வருமானம்
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் ஜெய் ஜவான், ஜெய் கிஷான் முழக்கத்திற்குப் பின்னர்தான் மத்திய அரசின் பட்ஜெட்டில் கிராம விவசாயம் என்ற வார்த்தை அதிகமாக இடம் பிடித்தது. மோடி அரசும் 2022ல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என்று சபதம் எடுத்துள்ளது. இன்று பட்ஜெட் உரை வாசித்த அருண் ஜெட்லியும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications