தமிழக விவசாயிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் சித்தராமையா... மேகதாது அணைக்கு ரூ. 5912 கோடி ஒதுக்கீடு!!
பெங்களூரு: தமிழக டெல்டா விவசாயிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ரூ. 5912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
தமிழகம்-கர்நாடக எல்லையில் மேகதாதுவில் அணை ஒன்றை கட்டப் போவதாக கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு தமிழக அரசு மற்றும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, காவிரி ஆற்றின் குறுக்கில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் எந்த பயனும் இதுவரை இல்லை.

இந்நிலையில், 70வது சுதந்திர தின விழாவை கொண்டாடிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக ரூ. 5912 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மழைக் காலத்தில் கடலில் விணாகக் கலக்கும் உபரி நீரை பயன்படுத்த இந்த அணையைக் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பெங்களூரு மாநகரத்திற்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இந்த அணை கட்டப்பட்டால் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சித்தராமையா கூறியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சித்தராமையாவின் இந்த அறிவிப்பு, தமிழக விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications