பாஜக அமைச்சரின் காரிலிருந்து ரூ91 லட்சம் பணம் பறிமுதல்.. மகாராஷ்டிராவில் பரபரப்பு !
பாஜக அமைச்சர் ஒருவரின் காரில் இருந்து கணக்கில் வராத பழைய 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மும்பை: மகாராஷ்டிர மாநில பாஜக அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கிற்கு சொந்தமான வாகனத்தில் இருந்து ரூ.91 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் சுபாஷ் தேஷ்முக். இவருக்கு சொந்தமாக உள்ள லோக்மங்கல் குழுமத்தில் ஏராளமான கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழுிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு லஞ்ச ஒழிப்புத் துறையும் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது சுபாஷ் தேஷ்முக்குக்கு சொந்தமான கார் ஒன்று வந்தது. அதில் தடை விதிக்கப்பட்டுள்ள ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது. இந்தத் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் காரை ஓட்டி வந்த ஓட்டுநரிடம் விசாரிக்கப்பட்டதில் சரியான ஆவணங்கள் எதையும் அவர் வழங்கவில்லை, இதனையடுத்து கைது செய்யப்பட்டார். உஸ்மனாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பாஜக அமைச்சரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!












Click it and Unblock the Notifications