தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கும் மனு... சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்க வெங்கய்யா திட்டம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென்ட் தீர்மானத்தை ஏற்பதா வேண்டாமா என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற உள
Recommended Video

டெல்லி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அளித்த இம்பீச்மென்ட் தீர்மானத்தை ஏற்பதா வேண்டாமா என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை நாட உள்ளார். அதன் பிறகே இம்பீச்மென்ட் தீர்மானத்தின் மீது இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம், நீதித்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த சில மாதங்களாகவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய இம்பீச்மென்ட் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இம்பீச்மென்ட் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர்
குலாம் நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேற்று ராஜ்யசபா தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் இம்பீச்மென்ட் மனுவை அளித்தனர்.
இந்த மனுவை ஏற்பதா வேண்டாமா என்று சட்ட வல்லுநர்களுடன் வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. மூத்த அரசு அதிகாரிகள் இருவரிடம் இது குறித்து வெங்கய்ய நாயுடு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த தீர்மானத்தின் மீது இறுதி முடிவு எடுப்பதற்கு எந்த காலக்கெடுவும் விதிகள்படி இல்லை. கடந்த காலங்களில் இது போன்ற இம்பீச்மென்ட் தீர்மானம் அளிக்கப்பட்ட போது 3 அல்லது 13 நாட்கள் வரை அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்பீச்மென்ட் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ராஜ்யசபா செயலகம் எம்.பிகளின் கையெழுத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். அதன் பிறகு ராஜ்யசபா தலைவர் தீர்மானத்தை ஏற்பது பற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார். வழக்கமாக ராஜ்யசபா தலைவர் தலைமை நீதிபதியுடன் இம்பீச்மென்ட் தீர்மானம் குறித்து விவாதிப்பார் ஆனால், இந்த தீர்மானம் தலைமை நீதிபதி மீதே அளிக்கப்பட்டுள்ளதால் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications