"2000 ரூபாய்" பெண்களுக்கு.. ஸ்டாலினின் "முதல் விதை".. எதிரொலித்த "தமிழக அரசு" மாடல்.. முதல்வர் அதிரடி
போபால்: தமிழ்நாட்டின் மாடல், வடமாநிலம் வரை எதிரொலித்து கொண்டிருக்கின்றன.. தமிழகத்தின் திட்டங்களுக்கான மவுசுகள் தென்மாநிலங்களிலும் கூடிவருகின்றன. அந்தவகையில், கர்நாடக மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், எப்படியாவது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளானது.. பாஜக மீதான அம்மக்களின் அதிருப்திகளை எல்லாம் ஒன்றுதிரட்டி,அவைகளையே தங்கள் வாக்குகளாக மாற்றும் யுக்தியை மேற்கொள்ள முடிவு செய்தது.

வாக்குறுதிகள்: அதில் ஒன்றுதான், தேர்தல் வாக்குறுதிகள்.. எத்தனையோ வாக்குறுதிகளை ராகுல் காந்தி பிரச்சாரத்தின்போது வழங்கியிருந்தார்.. ஆனால், அதில் பெரும்பாலானோரை ஈர்த்தது, ஒரே ஒரு விஷயம்தான்..
ராகுல்காந்தி தன்னுடைய பிரச்சாரத்தில், "நான் இப்போது ஒரு வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், முதல் நாளிலிருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்" என்று சொன்னதுமே, அம்மாநில மக்கள் திகைத்து போனார்கள்.. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை, என்று அடுக்கடுக்காக ராகுல் அறிவித்திருந்தார்.
திமுக ஸ்டைல்: இதெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நமக்கு தெரிவித்த வாக்குறுதிகளாகும்.. இதில், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்நாளே, கையெழுத்து போட்டு அமல்படுத்தியிருந்தார் ஸ்டாலின்.. அதே ஸ்டைலில் ராகுலும் வாக்குறுதி தந்தது, கர்நாடக மக்களை வெகுவாக ஈர்த்திருந்தது.. எதிர்பார்த்ததைபோலவே காங்கிரஸ் வெற்றி பெற்றது. துவண்டு கிடந்த கட்சிக்கு, கர்நாடக வெற்றியானது, மிகப்பெரிய துடுப்பாக இன்று மாறியிருக்கிறது.
இந்த வெற்றியை வைத்துதான், இனி அடுத்தடுத்த தேர்தல்களையும் காங்கிரஸ் சந்திக்க வேண்டியிருக்கிறது.. இந்த சூட்சுமத்தை பிரியங்கா காந்தியும் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார் போலும்.. அதனால்தான், மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரில், தேர்தல் பணிகள் தொடக்க விழாவில் பிரியங்கா கலந்துகொண்டபோது, தமிழ்நாடு மாடல் பிரச்சார யுக்தியையே, அந்த மாநிலத்திலும் புகுத்தினார்.
கரண்ட் கட்டணம்: ஆம்.. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 100 யூனிட் வரை இலவச மின்சாரம். அதற்கு மேல் 200 யூனிட் வரை பாதி மின்சார கட்டணம், பெண்களுக்கு மாதம் ரூ.1500, சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் என்றெல்லாம் நம்முடைய தமிழ்நாடு மாடலிலேயே அறிவித்திருக்கிறார்..
யார் யாருக்கு ரூ.2000: இப்போது விஷயம் என்னவென்றால், குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 வழங்கும் திட்டம், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரப்போகிறதாம்... ரூபாய் 2000 வழங்கக்கூடிய க்ருஹ லக்ஷ்மி திட்டத்தின் மூலமாக ஆகஸ்ட் மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வர இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மேலும், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது பிபி பில் மற்றும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கலாம்: மேலும், குடும்பத் தலைவிகள் சேவா சிந்து போர்ட்டல் மூலமாக மற்றும் https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/Englishஎன்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. அத்துடன், பெங்களூரு ஒன் கர்நாடக மற்றும் கிராம ஒன் மையங்களுக்கு நேரடியாக சென்று தங்களது விண்ணப்பங்களை பெற்று இலவசமாகவே சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் யாரேனும் வரி செலுத்துவோராக இருந்தால், இந்த விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும் என்றும், இந்த திட்டம் குறித்து யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் 1902 என்கிற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது..
அறிவிப்பு: அதுமட்டுமல்ல, குடும்பத் தலைவிகளுக்கான ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு கடைசி தேதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை... அதனால், முடிந்த வரைக்கும் பொதுமக்கள் கூடிய விரைவிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கர்நாடக முதல்வர் தன்னுடைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளார்...
ஆக, நம்ம தமிழ்நாடு அரசு மாடல், பல்வேறு மாநிலங்களிலும் எதிரொலித்து வருவது மிகுந்த மகிழ்ச்சியையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications