அதெப்படி எங்களுக்கு விருது தர மோடி மறுக்கலாம்? பஞ்சாயத்தை கூட்டும் ஆர்.எஸ்.எஸ். அறிவியல் அமைப்பு!
மைசூரு: கர்நாடகாவின் மைசூருவில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் தங்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்க மறுத்தது குறித்து பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் அறிவியல் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் அமைப்பாக செயல்படுவது விபா என்கிற விக்யான் பாரதி. இதன் சார்பாக டெல்லி ஐ.ஐ.டி.யில் கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி 2,000 மாணவர்கள் பங்கேற்ற 'செய்முறை அறிவியல்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது கின்னஸ் அமைப்பால் புதிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் அயர்லாந்தில் 1339 மாணவர்கள் பங்கேற்ற செய்முறை அறிவியல் நிகழ்ச்சியே உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனைக்காக மைசூருவில் அண்மையில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டில் விக்யான் பாரதி அமைப்புக்கு விருது வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விக்யான் பாரதிக்கு விருது வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் தெரிவிக்காமல் மறுத்துவிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் அமைப்பான விக்யான் பாரதி, அறிவியல் மூலமாக சகோதரத்துவத்தை வளர்ச்சிக்கும் முயற்சிகளுக்கு இது வருத்தமளிக்கும் நடவடிக்கையாகும். இந்த மாணவர்களை டெல்லிக்கு அழைத்து பிரதமர் மோடி கவுரவிப்பார் என எதிர்பார்க்கிறோம் என கொந்தளித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடிவாளம் ஆர்.எஸ்.எஸ். கையில் இருக்கிறது என எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக மத்திய அரசு எங்கள் கைகளில்தான் என ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இடஒதுக்கீடு குறித்து விமர்சிக்கப் போய் பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.
அதன் பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் வெளிப்படையான நெருக்கத்தை பிரதமர் மோடி தவிர்த்து வருகிறார். இதனாலேயே இந்திய அறிவியல் மாநாட்டிலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அறிவியல் பிரிவுக்கு விருது வழங்கினால் அது ஒரு சர்ச்சையாக வெடிக்குமோ என கருதி பிரதமர் மோடி தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.
ஆனாலும் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.! எந்த நாட்டாமை என்ன தீர்ப்பு தருவார்களோ!
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications