2000 ரூபாய் நோட்டு டிசைனில் அழைப்பிதழ்.... கர்நாடக பாஜக எம்எல்ஏவின் அடடே பற்று!
கர்நாடக பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் விளையாட்டு அரங்கம் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அச்சடித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக பாஜக எம்எல்ஏ சதீஷ் ரெட்டி தன்னுடைய பொம்மனஹள்ளி தொகுதிக்கான பேட்மிட்டன் கோர்ட் திறப்பு விழாவிற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழ் அடித்து தன்னுடைய பற்றை வெளிக்காட்டியுள்ளார்.
பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். முகநூல், டுவிட்டர் பக்கத்தில் பாஜக புகழ் பரப்பும் வேலைகளை அவர்கள் ஜரூராக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த பொம்மனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சதீஷ் ரெட்டி வித்தியாசமான முறையில் தன்னுடைய கட்சியின் செயல்பாடுகளை வெளிக்காட்டியுள்ளார்.அவருடைய தொகுதிக்குட்பட்ட பொம்மனஹள்ளி 175வது வார்டில் பேட்மிட்டண் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஓபன் ஹால் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் அச்சடித்துள்ளார். அதில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வடிவில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டில் மோடி
ரூபாய் தாள் போலவே லேஅவுட் கொடுக்கப்பட்டு அதில் காந்தி படத்திற்கு பதில் மோடியின் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் தேதி, இடம் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் விவரமும் முன் பக்கத் தாளில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

பாஜக சாதனைகள்
அழைப்பிதழின் பின் பக்கத்தில் 175வது வார்டில் செய்யப்பட்டுள்ள வசதிகள் எண் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று பிரதமர் மோடியின் சாதனைகளான மேக் இன் இந்தியா, ஜன் தன் திட்டம், ஸ்வச் பாரத், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு உள்ளிட்டவற்றை பட்டியலிட்டுள்ளார்.

வித்தியாசமான முயற்சி
இதே போன்று அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் என்றும், தொடர்புக்கான எண்ணும் அதில் இடம்பெற்றுள்ளது. அச்சு அசல் ரூபாய் நோட்டு போலவே இருக்கும் இந்த அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புது வித அழைப்பிதழ்
அழைப்பிதழ்களில் வித்தியாசத்தை கடைபிடிக்கும் வகையில் பிக் பாஸ் பாணியில் இன்விடேஷன் சமீபத்தில் கலைகட்டியது. இதே வரிசையில் பாஜக எம்எல்ஏவின் கற்பனையில் உருவாகியுள்ள இந்த அழைப்பிதழ் வைரலாகி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications