ரஷ்ய தூதர் டெல்லியில் மரணம்.. அலெக்சாண்டர் கடாகின் உடல் நலமின்றி உயிரிழப்பு.. மோடி இரங்கல்
இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரஷ்ய தூதர் அலெக்சாண்டர் கடாகின் டெல்லியில் இன்று மரணம் அடைந்தார் என்பதை இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.
அலெக்சாண்டர் கடாகின் இந்தியாவின் ரஷ்ய தூதராக பணி புரிந்து வந்தார். 67 வயதான அவருக்கு உடல் நலமின்றி இருந்தார். இந்நிலையில், இந்தியாவின் குடியரசு தினமான இன்று அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக மறைந்தார் என்று ரஷ்ய தூதரகம் அறிவித்தது.

அலெக்சாண்டர் கடாகின் 2009 ஆம் அக்டோபர் முதல் இந்தியாவின் தூதராக பணியாற்றினார். முன்னதாக, 1999 முதல் 2004 வரை துணைத் தூதராகவும் இந்தியாவில் சேவையாற்றியுள்ளார். இந்திய ரஷ்ய உறவின் மேம்பாட்டில் நெருங்கிய தொடர்பில் இருந்த அலெக்சாண்டர் கடாகின் மறைந்தார் என்று இந்தியாவின் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
அலெக்சாண்டர் கடாகின் மறைவிற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அலெக்சாண்டர் சிறந்த ராஜதந்திரி என்றும், இந்தி நன்றாக பேசத் தெரிந்த இந்தியாவின் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திய ரஷ்ய உறுதியான உறவிற்கு சோர்வில்லாமல் கடாகின் பணியாற்றியவர் என்றும் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications