4 வருட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள்.. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்!
4 வருட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: 4 வருட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 4 வருட ஆட்சியை வெற்றிகரமாக முடித்துள்ளது. அவையில் பெரும்பான்மையை இழந்திருக்கும் பாஜக, தற்போது 4 வருட ஆட்சியை கொண்டாடி வருகிறது.
பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக விற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் நான்கு வருடம் என்னென்ன நலத்திட்டங்கள் செய்யப்பட்டது என்று மத்திய அரசு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் நிறைய புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் மூலம் சிறந்த வருமானத்திற்கான வழிமுறை
4 வருட பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் உணவு பதப்படுத்தும் தொழிலில் வருவாய் அதிகரித்துள்ளது.

கருப்பு பணம் ஒழிப்பு
4 வருட ஆட்சியில் கருப்பு பணத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மூலம் 3 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானிற்கு எதிரான நடவடிக்கை
பாகிஸ்தானிற்கு எதிராக தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியன் மூலம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முத்தலாக்கிற்கு எதிரான நடவடிக்கை
முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததன் மூலம், இஸ்லாமிய பெண்கள் நலம் அடைந்துள்ளனர்.

பெண் தொழில்முனைவோர்
பெண் தொழில் முனைவோரின் நலனுக்காக ரூ.239.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி
4 வருட ஆட்சியில் மொத்தம் 4 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது.

புதிய
4 வருட பாஜக ஆட்சியில் இந்தியா முழுக்க உள்ள நகரங்கள் புதிய சாலை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ துறை
எய்ம்ஸ் மருத்துவமனை போல சிறப்பு வசதிகள் கொண்ட 20 புதிய மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது.

இந்தியா முன்னேற்றம்
எளிதாக வியாபாரம் நடத்த ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 20 இடங்கள் முன்னேறி உள்ளது.

மாசு
மாசு உண்டாக்கும் வாயுக்களுக்கு எதிராக இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

கல்வி
பெண்களின் கல்வியில் வளர்ச்சி அடையும் வகையில் நிறைய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் இல்லை
தொழில் துறையிலும், நிர்வாகத்திலும் உள்ள இடைத்தரகர்கள் மொத்தமாக ஒழிக்கப்பட்டுளள்னர்.

தொழில்முனைவோர் பயிற்சி
இந்தியா முழுக்க 1 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications