சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம்- புல்மேடு பாதையில் நெரிசல்!
பம்பை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 1,00,969 பேர் தரிசனம் செய்தனர். சபரிமலையில் பக்தர்கள் சுமார் 15 மணிநேரம் காத்திருந்து பதினெட்டு படிகளேறி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

15 மணிநேரம் காத்திருப்பு: விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் வெள்ளம் போல திரண்டிருந்தது. அப்பாச்சி மேடு முதல் சன்னிதானம் வரை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வரிசையில் பக்தர்கள் காத்திருந்து 18 படிகளேறி தரிசனம் செய்தனர். சபரிமலையில் நேற்று மட்டும் 1,00,969 தரிசனம் செய்தார். நடப்பு மண்டல பூஜை காலத்தில் முதல் முறையாக 1 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஐயப்பன் தரிசனத்துக்காக பக்தர்கள் 15 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
புல்மேடு பாதை: பம்பை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதால், புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புல்மேடு பாதை வழியாக சன்னிதானத்துக்கு நேற்று 5,798 பேர் தரிசனத்துக்காக வந்தடைந்தனர்.
தமிழக பக்தர்கள் படுகாயம்: சபரிமலையில் இருந்து தரிசனம் முடிந்துவிட்டு தமிழ்நாடு பக்தர்கள் பேருந்து நிலக்கல் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
தங்க அங்கி, மண்டல பூஜை: சபரிமலையில் மன்டல பூஜை நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது. அன்றைய நாளில் திருவிதாங்கூர் மகாராஜா, ஐயப்பனுக்கு வழங்கிய 450 பவுன் நகைகள் அணிவித்து வழிபாடு நடத்தப்படும். இதனையொட்டு தங்கி அங்கி ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்பட்டு சென்றது. நாளை பிற்பகல் பம்பை கணபதி கோவிலை தங்க அங்கி சென்றடையும். அன்று மாலை அப்பாச்சி மேடு, நீலிமலை வழியாக சன்னிதானத்தை தங்க அங்கி சென்றடையும் போது திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு நாளை பிற்பகல் 18 படிகளேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
3 நாட்கள் நடை சாத்தப்படும்: மேலும் 27-ந் தேதி கோவில் நடை சாத்தப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக 3 நாட்களுக்கு பின்னர் சனிக்கிழமை மாலை நடை திறக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 15-ந் தேதி நடைபெறும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications