சபரிமலையில் வருமானம் ”கொட்டுது”: 13 நாட்களில் ரூ. 44 கோடி வசூல்
சபரிமலை: சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வருமானம் 13 நாட்களில் ரூபாய் 44 கோடி ரூபாயை கடந்தது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூபாய் 9 கோடி ரூபாய் அதிகமாகும்.
சபரிமலையில் மண்டல காலம் தொடங்கிய நவம்பர் 17 முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.
கார்த்திகை 13 ஆம் தேதி வரை உள்ள கணக்குகளின் படி சபரிமலை வருமானம் 44 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 503 ரூபாயாக உள்ளளது. இது கடந்த ஆண்டு இதே நாளில் ரூபாய் 35 கோடி வருமானம் கிடைத்து இருந்தது.

இந்த ஆண்டு காணிக்கையாக ரூபாய் 16.48 கோடி, அரவணை விற்பனையில் ரூபாய் 18.17 கோடி, அப்பம் விற்பனையில் ரூபாய் 3.84 கோடி, அபிஷேகம் மூலமாக ரூபாய் 49 லட்சம் கிடைத்துள்ளது.
இதனை நிருபர்களிடம் தெரிவித்த போர்டு உறுப்பினர் சுபாஷ் வாசு பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை பொறுத்து அவர்களுக்கான வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
அவர் மேலும், சபரிமலை மற்றும் பம்பையில் நடைபெறும் அன்னதானம், பந்தளம் மற்றும் எருமேலிக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பந்தளத்தில் காலை 7.30க்கு உப்புமா மதியம் 12 க்கு சாப்பாடு இரவு 7.30 க்கு கஞ்சி வழங்கப்படும்.
எருமேலியில் காலை 11 மணி முதல் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் சேர்த்த கஞ்சி வழங்கப்படும். மலையேறும் பக்தர்களுக்கு உடல் உற்சாகத்தை ஏற்படுத்த இது உதவும். மாலை 6.30 முதல் கஞ்சி பயறு ஊறுகாய் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications