For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு!!

Google Oneindia Tamil News

பம்பை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சபரிமலையில் கோயில், 18 ஆம் படி, கொடிமரம், சோபானம் ஆகிய இடங்கள் கேரள போலீஸ் மற்றும் மத்திய அதிவிரைவு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் நவீன துப்பாக்கிகளுடன் கோயிலை சுற்றி நிறுத்தப்பட்டனர்.

மத்திய ரிசர்வ் போலீசாரின் அதிரடிப்படை பிரிவினருக்கு எவ்வித நெருக்கடியையும் எதிர் கொள்வதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரணப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

கோயிலின் அனைத்து வாசல்களிலும் ம் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டது. நடைப்பந்தலில் எக்ஸ்ரே ஸ்கேனர்களில் பக்தர்களின் பைகள் ஸ்கேன் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

அண்டை மாநிலங்களில் இருந்து வந்துள்ள போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சன்னிதானத்தின் சுற்றப்புறங்களில் உள்ள குப்பை தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மெட்டர் டிடெக்டர் மற்றும் நவீன கருவிகளால் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

குப்பை கூட்டப்பட்டிருக்கும் இடங்களையும் போலீசார் விட்டுவைக்கவில்லை. கடைகளில் அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வெளியேறி விட்டனர்.

sabarimala under high security today…

பம்பையில் கணபதி கோயில் அருகில் அனைத்து பக்தர்களும் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப் பட்டனர்.பம்பையில் இருந்து சன்னிதானம் வந்து தரிசனம் நடத்துவதற்கிடையில் மூன்று இடங்களில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதிக்கப் படுகின்றனர். சன்னிதானத்தில் அறைகளில் தங்கியிருப்பவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவையும் போலீசாரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுகண்காணிக்கப்படுகிறது.

English summary
Sabarimala was under high security today because of December 6th, Demolition of Babar Masjid day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X