எம்.பி. பதவியேற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ்யசபாவில் சச்சின் கேட்ட முதல் கேள்வி!
டெல்லி: எம்.பியாக பதவியேற்ற பின்னர் 3 ஆண்டுகள் கழித்து சச்சின் டெண்டுல்கர் தனது முதல் கேள்வியை ராஜ்யசபாவில் எழுப்பியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் மொத்தம் 11 பேர் நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டனர். இதில் 11- வது எம்.பியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதவியேற்றார். சச்சினை எம்.பியாக நியமித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாக காங்கிரஸ் மீது அப்போது விமர்சனம் வைக்கப்பட்டது. இருப்பினும் நாடாளுமனறத்தில் சச்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகமாக இருந்தது.

இதையடுத்து பதவியேற்ற பின்னர் ராஜ்யசபாவில் நடந்த பல்வேறு விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை ஆனால், ராஜ்யசபா கூட்டங்களில் ஓரிருமுறை கலந்துகொண்டாலும் எம்.பி.என்ற முறையில் விவாதம் நடத்தவில்லை. எம்.பி. நிதியையும் பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்ததாகவும், அவர் ராஜ்யசபாவில் கேள்வி ஏதும் கேள்வி கேட்டதாக அவை குறிப்பில் இல்லை என்ற அவ்வப்போது சில விமர்சனம் செய்து வந்ததனர்.
இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையில் எம்.பி. ஆக பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகுபாராளுமன்றத்தில் முதல் கேள்வியை கேட்டுள்ளார் சச்சின்..கிரிக்கெட் விளையாட்டில் சாம்பவனாக புகழ் பெற்ற சச்சின் ஆடுகளத்தில் அதிரடியாக செயல்பட்டு எதிர் அணியினருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர். ஆனால், அப்படிபட்ட சச்சினுக்கு பாராளுமனறத்தில் தனது முதல் கேள்வியை கேட்பதற்கு 3 ஆண்டுகள் தேவைபட்டுள்ளது.
அப்படி என்னதான் கேள்வி கேட்டார். சென்னை, மும்பை, டெல்லி ஆகிய மூன்று நகரங்களில் செயல்படும் புறநகர் ரயில் சேவையை மேம்படுத்துவதற்காக அவை தனிக்கோட்டமாக அறிவிக்கப்படுமா? என்று ரயில்வே அமைச்சரிடம் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என ரயில்வே அமைச்சகம் பதில் கூறிவிட்டது. மேலும், லைசென்ஸ் உரிமம் பெறுவதில் ஏற்படும் பிரச்சினை தொடர்பாக சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் மற்றொரு கேள்வியையும் எழுப்பியுள்ளார் சச்சின்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications