ராஜஸ்தான்.. டோங்க் தொகுதியில் சச்சின் பைலட் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: டோங்க் தொகுதியில் பாஜக வின் அஜித் ஷிங் மேத்தாவை தோற்கடித்த காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் 29475 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பாஜக 101 இடங்களில் வெற்றி + 13 இடங்களில் முன்னணி என 114 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி + 6 இடங்களில் முன்னிலை என மொத்தம 70 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிஎஸ்பி 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இந்த வெற்றி நிலவரம் மூலம் ராஜஸ்தானில் பாஜக முழுப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க போவது உறுதியாகி உள்ளது.

 Sachin Pilot regains Rajasthans Tonk seat, takes lead after two rounds

காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு எண்ணிகை தொடங்கியதில் இருந்தே சரியான முன்னேற்றம் இல்லை. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது தொகுதியான சர்தார்புராவில் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில், மீண்டும் முன்னணிக்கு வந்து வெற்றி பெற்றார . அதே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் டோங்கில் பின்தங்கி இருந்தார் .

டோங்க் தொகுதியில் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ராஜஸ்தானில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் முன்னிலைக்கு வந்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அஜித் ஷிங் மேத்தாவை விட அதிக அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். அதன் பின்னர் வந்த சுற்றுக்களில் அதிக வாக்குகள் பெற்ற சச்சின் பைலட் 105812 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வின் அஜித் ஷிங் மேத்தா 76337 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் சச்சின் பைலட் 29475 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

டோங் தொகுதியில் கடந்த 2018ம் ஆண்டு 1090400 வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் வெற்றி பெற்றார். பாஜகவின் யூனுஸ் கான் 54861 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். பிஎஸ்பி கட்சியின் முகமது அலி மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.

அசோக் கெலாட் உடன் சச்சின் பைலட் கடந்த 2020 ஆம் ஆண்டு நேரடியாக மோதலில் ஈடுபட்டார். அப்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், 18 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கெலாட் தலைமையிலான அரசுக் எதிராக கிளர்ச்சி செய்தார். இதனால் சச்சின் பைலட் துணைமுதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிலிருந்து கெலாட், பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. அசோக் கெலாட் அப்போது சச்சின் பைலட்டை துரோகி, உபயோகமற்றவர் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் சச்சின் பைலட முன்னதாக கெலாட் அரசுக்கு எதிராக ஊழல் எதிர்ப்பு யாத்திரை நடத்தி இருந்தார். இப்போது அசோக் கெலாட்டுடன் இணைந்து தேர்தலையும் சந்த்துள்ளார். பொருந்தாமல் போன கூட்டணி போல் ராஜஸ்தானில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+