இத்தனை எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம்.. சச்சின் பைலட் டீம் வெளியிட்ட வீடியோ.. கலக்கத்தில் காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று காங்கிரஸ் தரப்பை கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்கள் காங்கிரஸ் கட்சியை கலக்கத்திற்கு உள்ளாக்கி உள்ளது. அங்கு அசோக் கெலாட் ஆட்சி கவிழுமா, நிலைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தானின் துணை முதல்வர் மற்றும் மாநில தலைவர் சச்சின் பைலட்டே கட்சிக்கு எதிராக திரும்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sachin Pilot team releases a video of their supporters from the resort

கட்சியிலும், ஆட்சியிலும் தனக்கு தரப்பட வேண்டிய மரியாதை சரியாக தரப்படவில்லை என்று கூறி, சச்சின் பைலட் அங்கு ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்துள்ளார். நேற்று முதல்நாள் சச்சின் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் ஐக்கியமானார்.

டெல்லியில் இவர் 30 எம்எல்ஏக்களுடன் இருப்பதாக தகவல்கள் வந்தது. இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக நேற்று அசோக் கெலாட் ஆட்சிக்கு 107 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்தது. இந்த நிலையில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் தற்போது சச்சின் பைலட் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதன்படி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் இருக்கும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதில் 30 எம்எல்ஏக்கள் காணப்படவில்லை என்றாலும் 15 எம்எல்ஏக்கள் காணப்படுகிறார்கள். இதில் சச்சின் பைலட் இல்லை. அவரையும் சேர்த்தால் கணக்கு 16 என்று ஆகிறது. இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று விவரம் இன்னும் வெளியாகவில்லை.இந்த வீடியோ காங்கிரஸ் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

சச்சின் பைலட் vs அசோக் கெலட்.. ராஜஸ்தானில் இன்று மீண்டும் எம்எல்ஏக்கள் மீட்.. என்ன நடக்கும்?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+