நான் அவன் இல்லை.. தலித் என்பதாலே குறி.. ஆபாச சிடி பற்றி ஆம் ஆத்மி மாஜி மந்திரி கூறுவதை பாருங்கள்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதால், டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
கெஜ்ரிவால் அரசில் சமூக நலத்துறைக்கு பொறுப்பு வகித்து வந்தவர் அமைச்சர் சந்தீப்குமார். இவர் ஆறு பெண்களுடன் இருப்பது போன்ற சிடி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியானது. ஆனால், இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று சந்தீப்குமார் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை உள்ளூர் சேனல் ஒன்று அமைச்சர் சந்தீப்குமார் ஆறு பெண்களுடன் இருக்கும் அந்த வில்லங்க வீடியோவை ஒளிபரப்பு செய்தது. இதனால், அதிர்ச்சியடைந்த முதல்வர் கெஜ்ரிவால், உடனடியாக சந்தீப்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.

மூன்றாவது அமைச்சர்
இரண்டாவது முறையாக டெல்லியில் ஆம் ஆத்மி அரசு அமைந்த பின்னர், பதவியில் இருந்து நீக்கப்படும் மூன்றாவது அமைச்சர் சந்தீப்குமார்.

குற்றச்சாட்டு
ஆனால், டிவியில் ஒளிரப்பானதால் மட்டுமே சந்தீப்குமாரை அமைச்சர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் நீக்கினார் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

சமரசம் இல்லை
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால், சந்தீப்குமார் தொடர்பாக சர்ச்சைக்குரிய சிடி கிடைத்துள்ளது. பொதுவாழ்வில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

பொறுக்காது
செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, குற்றச்செயல்கள், ஊழல்களில் ஒருபோதும் ஆம் ஆத்மி கட்சி சமரசம் செய்து கொள்ளாது. முதல் அமைச்சர் உள்பட யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

சதி
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சந்தீப் குமார் கடுமையாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. இது எனக்கு எதிரான சதியாகும்.

நான் அவன் இல்லை
சர்ச்சைக்குரிய அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை. அந்த வீடியோ டேப்பில் உண்மையில்லை. ஏபிபி செய்தி நிறுவனம் கூட, இந்த டேப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என கூறியுள்ளது. இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தி, டேப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

தலித் என்பதால்..
நான் தலித் பிரிவை சேர்ந்தவன் என்பதற்காக என்மீது குறி வைக்கப்பட்டு உள்ளது. தலித்தாக இருப்பதால் பெரிய விலை கொடுத்து இருக்கிறேன். இது எனக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியாகும். இவ்வாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications