Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீயாக பரவும் வீடியோவில் இருப்பது ஜிவா டோணியா?: சாக்ஷி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ மற்றும் புகைப்படத்தில் இருப்பது எங்கள் மகள் ஜிவா அல்ல என்று கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

டோணி உலகக் கோப்பை போட்டிகளில் பிசியாக இருந்தபோது நிறை மாத கர்ப்பிணியான அவரது மனைவி சாக்ஷி கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜிவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சாக்ஷி ட்விட்டரில் தெரிவித்தார்.

டோணியோ நாட்டு பணி தான் முக்கியம் என்று கூறி மகளை பார்க்க வரவில்லை. உலகக் கோப்பை போட்டிகள் முடிந்த பிறகே அவர் தனது மகளை முதன்முதலாக பார்த்தார்.

சாக்ஷி

சாக்ஷி

சாக்ஷி தனது மகளின் பிஞ்சுக் கைகளை போட்டோ எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டார். குழந்தையின் புகைப்படத்தை வெளியிடவில்லை.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

டோணி ஒரு குட்டிப் பாப்பாவுடன் இருக்கும் போட்டோ ஃபேஸ்புக்கில் வெளியானது. அந்த குட்டிப் பாப்பா தான் டோணியின் மகள் என்று பலரும் நினைத்தனர்.

This Video Of MS Dhoni Meeting His Baby Girl For The First Time Is Going Viral, But There's One Small Problem..... baby in the picture is not Dhoni's daughter at all.Sakshi Dhoni took to twitter to clarify that the baby in the picture wasn't her and MS Dhoni's daughter at all.

Posted by Trending On India on Tuesday, March 31, 2015

வீடியோ

டோணியும், போட்டோவில் உள்ள குட்டிப் பாப்பாவும் இருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஜிவா

ஜிவாவின் தவறான புகைப்படம் பரவி வருகிறது என்று சாக்ஷி இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+