ஆண்டுக் கணக்கில் தலைக்கு மேல் தொங்கும் வாள்: சல்மான் வழக்கு பற்றி தம்பி சொஹைல்
மும்பை: சல்மான் கான் வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாக அவரது தம்பியும், பாலிவுட் நடிகருமான சொஹைல் கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் நடந்து வந்தது.

சல்மான்
விபத்து ஏற்படுத்திய வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதும், படப்பிடிப்புகளுக்கு செல்வதுமாக ஆண்டுகளை கடத்தி விட்டார். வழக்கில் அவ்வப்போது திருப்புமுனைகள் ஏற்பட்டது.

டிரைவர்
சம்பவம் நடந்த அன்று நான் தான் காரை ஓட்டினேன் என சல்மான் கானின் டிரைவர் அசோக் சிங் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் அவர் திடீர் என்று ஆஜரானார்.

தீர்ப்பு
சல்மான் கான் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொஹைல்
சல்மான் வழக்கு பற்றி அவரது தம்பி சொஹைல் கான் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வாள் போன்று பல ஆண்டுகளாக தொங்கிக் கொண்டிருக்கிறது. வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.

காஷ்மீர்
பஜ்ரங்கி பாய்ஜான் படப்பிடிப்பில் காஷ்மீரில் இருந்த சல்மான் கான் நீதிமன்ற தீர்ப்பையொட்டி மும்பை கிளம்பி வந்துள்ளார். நாளைய தீர்ப்பை நினைத்து அவரை வைத்து படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்கள் தான் மிகவும் டென்ஷனாக உள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications