ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ தேர்ச்சி பெற்ற "சல்மான் கான்"... அதுவும் ஜஸ்ட் பாஸ்
டெல்லியில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ மாணவனின் சான்றிதழில் அவரது படத்துக்கு பதிலாக நடிகர் சல்மான் கானின் படம் இடம்பெற்றிருந்தது.
ஆக்ரா: டெல்லியில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டம் பெற்ற மாணவனின் சான்றிதழில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நடிகர் சல்மான் கானின் படம் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாரில் உள்ள அம்ரதா சிங் நினைவு கல்லூரி ஆக்ரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய கல்லூரிகளை சேர்ந்த 7.2 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சி பெற்றனர்.

கல்லூரியில் படித்த மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பல்கலைக்கழக ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கல்லூரியில் பிஏ படித்த மாணவன் ஒருவனுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நடிகர் சல்மான் கானின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததை கண்டித்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் மதிப்பெண் சான்றுகளை தனியார் நிறுவனம் அச்சடிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. எனவே இது அந்த நிறுவனம் செய்த தவறு என்று கூறப்படுகிறது. இது ஒன்றும் புதிதல்ல என்றும் ஏற்கெனவே ஒரு மாணவருக்கு பதிலாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
மேலும் ஒரு மாணவரின் பெயர் பீம்ராவ் அம்பேத்கர் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்ததாகவும் என்று கூறுகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.எஸ்.ஷர்மா கூறுகையில், மாணவனின் புகைப்படத்துக்கு பதிலாக சல்மான் கான் புகைப்படம் இடம்பெற்றது தவறானது. இதுவரை எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை என்று தெரிவித்தார்.
மாணவர்களுக்கு விநியோகம் செய்வதற்கு முன்பே அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டனர். இதேபோல் கடந்த ஆண்டு தேர்வுக்கான அனுமதிச்சீட்டில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications