3 வருடங்களுக்கு மேல் தண்டனை விதிக்க வேண்டாம்- சல்மான் கான் வக்கீல் கோரிக்கை
மும்பை: நடிகர் சல்மான் கானுக்கு 3 ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்க வேண்டாம் என்று அவரது வக்கீல் வாதிட்டார்.
கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி நடிகர் சல்மான்கான்,மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் சல்மான்கானின் கார் ஏறி இறங்கியதில், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த மும்பை செஷன்ஸ் கோர்ட் இன்று சல்மான் கான் குற்றவாளி என்றும் அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தது.
தண்டனை குறித்து பின்னர் இரு தரப்பு வக்கீல்களின் வாதம் நடந்தது. முதலில் வாதிட்ட சல்மான் கானின் வக்கீல் ஷிவடே வாதிடுகையில், சல்மான் கான் பல சமூக சேவைகளைச் செய்துள்ளார். சமுதாய சேவை என்பது அவரது ரத்தத்தில் ஊறியது. இதுவரை ரூ. 47 கோடி வரை சமூக சேவைக்காக அவர் செலவிட்டுள்ளார்.
அவருக்கு இதய நோய் உள்ளது. அவரை சிறையில் அடைத்தால் பல சிகிச்சைகளை அவர் பெற வேண்டியிருக்கும். சிறைக்குள் அதெல்லாம் சாத்தியம் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை தர வேண்டும். அவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை தர வேண்டாம் என்று வாதிட்டார்.
பின்னர் வாதிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரதீப் காரட், வழக்கின் சீரியஸ்தனத்தை கருத்தில் கொண்டு தண்டனையை அறிவிக்க வேண்டும். சல்மான் கானுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications