அகிலேஷ் முன்னிலையில் கண்ணீர் விட்டு கதறிய சமாஜ்வாடி வேட்பாளர்!
முதல்வர் அகிலேஷ் பிரசாரத்துக்கு வந்தபோது மேடையிலேயே கதறி அழுதார் சமாஜ்வாடி வேட்பாளர்
தியோரியா: முதல்வர் அகிலேஷ் யாதவ் பிரசாரத்துக்கு வந்தபோது மேடையிலேயே சமாஜ்வாடி வேட்பாளர் கதறி அழுத சம்பவம் உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் நாளை 6-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தியோரியா மாவட்டம் பர்கஜ் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக பிடி திவாரி போட்டியிடுகிறார். இங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அவருக்கு ஆதரவாக மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது மேடையில் இருந்த வேட்பாளர் திவாரி திடீரென கதறி அழுதார். கட்சியில் உள்கட்சி பூசல் உள்ளது. நான் தோற்று விடுவேனோ என்று தயங்கியபடி கூறினார். இதைப் பார்த்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உடனே மைக்கை வாங்கிய அகிலேஷ், எல்லா தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பர்கஜ் தொகுதியை எப்படி அவர் எடுப்பார் என்று பார்ப்போம். இங்கு ஜெயிக்கப்போவது திவாரி தான் என்று வேட்பாளருக்கு தைரியமூட்டினார். கூடியிருந்த தொண்டர்களும் கைதட்டி வரவேற்றனர். இதன்பிறகு வேட்பாளர் உற்சாகம் அடைந்தார். போட்டியிடும் வேட்பாளரே பிரசாரத்தின் போது கதறி அழுதது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications