இந்த ரோதக் சகோதரிகளுக்கு ஊர் ஊராக போய் இளைஞர்களை அடிப்பதுதான் வேலையோ....??
டெல்லி: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில் தங்களைச் சீண்டிய இளைஞர்களை சரமாரியாக அடித்து பரபரப்பை ஏற்படுத்தி ஹரியானா மாநில அரசிடமிருந்து பரிசையும் பெற்று விட்ட சகோதரிகள் இருவர், ஏற்கனவே கடந்த மாதமும் இதேபோல சாலையில் வைத்து ஒரு இளைஞரை அடித்தது போன்ற வீடியோ வெளியாகி இவர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஹரியானா மாநிலம் ரோதக் நகர அரசுப் பேருந்தில் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி இளம் சகோதரிகளான ஆர்த்தி குமார், பூஜா ஆகியோர் பயணம் செய்தனர். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த சில இளைஞர்கள் இந்த இளம்பெண்களை ஈவ் டீசிங் செய்தாதக கூறப்படுகிறது. மேலும் அப்பெண்கள் மீது அவர்கள் காகிதங்களையும் வீசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அந்த இரு சகோதரிகளும் கோபமடைந்தனர். டிரைவர், கண்டக்டரிடம் புகார் கூறியும் அவர்கள் எதுவும் செய்யவில்லையாம். பிற பயணிகளும் கூட உதவ முன்வரவில்லை என்று தெரிகிறது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் எதிர்ப்புக் குரல் கொடுத்தபோது அவரைத் தாக்க அந்த இளைஞர்கள் முயன்றதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்த இரு சகோதரிகளும் தங்களிடம் இருந்த பெல்ட்டால் அந்த இளைஞர்களின் முகத்திலும், உடம்பிலும் மாறி மாறி அடித்து துவைத்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த மற்றொரு பெண் பயணி செல்போன் மூலம் வீடியோ எடுத்தாராம். இது இணையதளம், டிவி சானல்கள் என அனைத்திலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி குல்தீப், மொஹித், தீபக் என்ற மூன்று இளைஞர்களை ஈவ் டீசிங் வழக்கில் கைது செய்தனர்.
ஒரு மாதத்திற்கு முன்பே ஒரு அடிதடி
இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதிலும் இந்த இரு சகோதரிகளே இருப்பது போல காட்சி உள்ளது. அதிலும் ஒரு இளைஞரை இவர்கள் பொது இடம் ஒன்றில் வைத்து அடித்து வெளுக்கின்றனர். இந்த வீடியோவில் இருப்பது தாங்கள்தான் என்று அந்த சகோதரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த இரு சகோதரிகளின் செயல் குறித்து டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பலர் விமர்சனம் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். இவர்கள் செட்டப் செய்து இப்படி வீடியோவை வெளியிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மை என்னவோ....!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications