வீடு, கட்டிடங்களுக்கு இலவச மண்: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி திட்டம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்திற்குள் நடைபெறும் கட்டுமானத்திற்குத் தேவையான மணல் இலவசமாக வழங்க அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயவாடாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக அவர் நடத்திய ஆலோசனையின் போது இந்த யோசனையைத் தெரிவித்தார்.

sand free of cost in Andhra: chandrababu naidu

இனிமேல் ஆந்திர மாநிலத்திற்குள் நடைபெறம் கட்டுமானப் பணிகளுக்கு மணலை இலவசமாக வழங்கலாம் என்று அவர் யோசனை கூறினார். இதுதொடர்பாக கொள்கை ரீதியிலான ஒப்புதலையும் அவர் அளித்தார். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர்கள் நாராயண ராவ், புல்லா ராவ் ஆகியோர் கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்திற்குள் நடைபெறும் கட்டுமானம் அது எந்த வகையாக இருந்தாலும் சரி. யாரால் மேற்கொள்ளப்பட்டாலும் சரி, மணள் இலவசமாக அளிக்கப்படும். அதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த இலவச மணலை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று சட்ட விரோதமாக விற்பனை செய்வதையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தற்போது மணல் விற்பனை மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 200 கோடி வருவாய் கிடைக்கிறது. அதை மக்கள் நலனுக்காக விட்டுத் தரலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதாக அமைச்சர்கள் மேலும் கூறியுள்ளனர்.

குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யும் தமிழ்நாட்டிலும் இலவச மணல் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் யோசிப்பாரா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+