தெலுங்கானா மாநில தூதராக 'ஹைதராபாதி' சானியா மிர்சா நியமனம்
ஹைதராபாத்: புதிதாக உதயமாகியுள்ள தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, உலக டென்னிஸ் வீராங்கனைகளில் முக்கியமானவர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணமுடித்துள்ளார்.

டென்னிசில் சாதனை
சமீபத்தில் இவர் உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறி தனது வாழ்நாள் சாதனையை நிகழ்த்தி காண்பித்தார். இந்நிலையில் ஆந்திராவில் இருந்து பிரித்து ஹைதராபாத்தை தலைநகராக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானாவுக்கு சானியா மிர்சாவை தூதராக நியமித்துள்ளது அம்மாநில அரசு.

வெளிநாட்டிலும் புகழை பரப்ப..
தெலுங்கானாவின் தொழில் உள்கட்டமைப்பு கழக மேலாண் இயக்குநர் ஜெயேஸ் ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், "சானியா மிர்சா உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தெலுங்கானா குறித்த கவுரவத்தை உயர்த்தி பிடிப்பார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரூ.1 கோடி கவுரவ பணம்
மாநில தூதராக இருக்க சம்மதித்த சானியாவுக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். ஹைதராபாத்தில் நடந்த தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின்போது இந்த காசோலை சானியாவிடம் அளிக்கப்பட்டது.

நிஜ ஹைதராபாதி
சந்திரசேகரராவ் இந்த நிகழ்ச்சியின்போது பேசுகையில் "உண்மையான 'ஹைதராபாதி'யான சானியா மிர்சா நமது மாநில தூதராகியுள்ளது பெருமை அளிக்கிறது. உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு அவர் வர வேண்டும் என்பதே நமது விருப்பம்." என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications