ஆந்திராவிலும் அடி: நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சானியா மிர்ஸா
ஹைதராபாத்: ஹைதராபாத் டைம்ஸ் வெளியிட்ட 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் ஹைதராபாத் பிரிவு 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் யார் என மக்களிடையே ஆன்லைன் மூலமாக வாக்கெடுப்பு நடத்தியது. மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் 2014ம் ஆண்டில் ஆந்திர மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
25 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலின் விவரம் வருமாறு,

சானியா
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சானியா மிர்ஸா தான் 2014ம் ஆண்டில் ஆந்திர மக்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண் ஆவார். கடந்த ஆண்டு 11வது இடத்தில் இருந்த அவர் இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஸ்ரேயா சரண்
மார்க்கெட் படுத்துவிட்டாலும் ஆந்திர மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் ஸ்ரேயா சரண். ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் சானியா மிர்ஸாவுக்கு அடுத்த இடத்தில் ஸ்ரேயா உள்ளார்.

அனுஷ்கா ஷெட்டி
தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அனுஷ்கா தான் 2014ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் இந்த பட்டியலில் 15வது இடத்தில் இருந்தார்.

ஸ்ருதி ஹாஸன்
கடந்த ஆண்டு ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஸ்ருதி ஹாஸன் இந்த ஆண்டு 4வது இடத்திற்கு வந்துவிட்டார். ஸ்ருதிக்கு தமிழ், இந்தி தவிர தெலுங்கு திரை உலகிலும் மவுசு உள்ளது.

நயன்தாரா
ஹைதராபாத் டைம்ஸ் பட்டியலில் 5வது இடத்தில் பூஜா ஹெக்டேவும், 6வது இடத்தில் தமன்னாவும், 9வது இடத்தில் சமந்தாவும், 10வது இடத்தில் ஹன்சிகாவும், 14வது இடத்தில் நயன்தாராவும், 20வது இடத்தில் காஜல் அகர்வாலும் உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications