தெலுங்கானா தூதர் சானியா மிர்சா.. அரசியல் கட்சிகள் நிலை!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானாவின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்பட்டதற்கு அம்மாநில பாஜக தலைவரைத் தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலுங்கானா மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டதால் அவர் 'பாகிஸ்தான் மருமகள்".. அவரை எப்படி தெலுங்கானாவின் தூதராக நியமிக்கலாம் என்று அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் கே. லக்ஸ்மன் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இருப்பினும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தெலுங்கானா பாஜக தலைவரின் கருத்தை நிராகரித்தே வருகின்றனர்.

சானியா மிர்சா விவகாரத்தில் தலைவர்களின் கருத்துகள்:
- சானியா விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை; பாகிஸ்தானின் மருமகள் என்று சிலர் விமர்சித்திருந்தால் அது அவர்களின் கலாசாரம் என்பதையே வெளிப்படுத்துகிறது- பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி
- தெலுங்கானா பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு மிகச் சரியானது- பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி
- தெலுங்கானா போராட்டத்துக்காக எதுவும் செய்யாத சானியா மிர்சாவை தூதராக நியமிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர். வேறு ஒருவரை தூதராக நியமிக்க வேண்டும் - தெலுங்கானா காங்கிரஸ் தலைவரான ஹனுமந்தராவ்
- சானியா மிர்சாவை தூதராக நியமித்ததில் எந்த ஒரு தவறுமே இல்லை. அப்படியானால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் அனைவரையும் பாஜக எதிர்க்கிறதா? அவர்களின் குறுகிய மனப்பான்மையைத்தான் இது வெளிப்படுத்துகிறது- சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் அகர்வால்
- பாஜகவினரின் இத்தகைய கருத்துகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சானியாவை தூதராக நியமித்தது சரியான நடவடிக்கை - காங்கிரஸ் கட்சியின் ரஷீத் ஆல்வி
- சானியா மிர்சா இந்தியாவின் புதல்வி... இந்த நாட்டுக்கு புகழை தேடித் தந்தவர்.. அவர் நமது தூதுவரே- கிரண்பேடி
- தெலுங்கானா அரசின் நடவடிக்கையை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்.. அவரை தூதராக நியமித்தது சரியான நடவடிக்கை- பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications