காதலில் வீழ்ந்த சானியாவின் தங்கை.. ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார்
ஹைதராபாத்: சானியா மிர்ஸாவின் தங்கை அனம் மிர்ஸா காதல் திருமணம் செய்யவுள்ளார். இது இரு வீட்டார் சம்மதத்துடன், அவர்களே நடத்தி வைக்கப் போகும் திருமணமாகும். இந்தத் திருமணத்தால் சானியா குடும்பத்தினர் விழாக்கோலம் பூண்டுள்ளனர்.
அடுத்தடுத்து இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று வெற்றிப் பெருமிதத்துடன் தாயகம் திரும்பியுள்ளார் சானியா. அடுத்த சில நாட்கள் தனது தங்கையின் திருமண ஏற்பாடுகளில் உற்சாகமாக பங்கேற்கவுள்ளாராம்.
நாளை அனம் மிர்ஸாவின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளதாம்.

காதல் திருமணம்
அனம் மிர்ஸாவை மணக்கப் போவது ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்பர் ரஷீத் என்பவர் ஆவார். இவர் விளம்பர நிறுவனத் தொழிலில் ஈடுபட்டுள்ளார். ஒரு வருடமாக இருவரும் காதலித்து வருகின்றனராம்.

நாளை நிச்சயதார்த்தம்
நாளை அனம் மிர்ஸா - அக்பர் ரஷீத் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெறவுள்ளது. குடும்பத்தினர், இரு தரப்புக்கும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொள்கின்றனர்.

வைர உடையுடன் வரப் போகும் சானியா
இந்த நிகழ்ச்சியில் வைரம் பதித்த கவுன் அணிந்து கலந்து கொள்ளவுள்ளாராம் சானியா. காக்ரோ சோளியில் வரப் போகிறார் அனம் மிர்ஸா. அவருக்கான உடை விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்.

கஸல் கச்சேரி
நிச்சயதார்த்தம் முடிந்ததும் கஸல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மும்பையைச் சேர்ந்த பூஜா கய்தோன்டே கலந்து கொண்டு பாடவுள்ளார்.

மாஸ் கம்யூனிகேஷன்
அனம் தற்போது மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் பிலிம் மேக்கிங் படிப்பைப் படித்து வருகிறார். அதை முடித்த பின்னர் பத்திரிகையாளராக வேண்டும் என்பது அவரது திட்டமாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications