மீண்டும் சமஸ்கிருதம்.. மத்திய அரசின் முடிவால் தேவையில்லாத கொந்தளிப்பே ஏற்படும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப் பாடத்தை ரத்து செய்து விட்டு சமஸ்கிருதத்தை சொல்லித் தர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது தேவையில்லாத கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் மொழிப்பாடத்தை உடனடியாக ரத்து செய்து விட்டு அதற்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Sanskrit to be made compulsory language in KV schools

இதை சமஸ்கிருத திணிப்பாக பல்வேறு கட்சிகள், குறிப்பாக தமிழக கட்சிகள் கண்டித்து குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கனவே இந்தித் திணிப்பில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சமஸ்கிருத திணிப்பையும் மத்திய அரசு தொடங்கியுள்ளதாக கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்பிக்க மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+