'சலசலப்பு' சரிதாவை வைத்து காங்கிரஸை நடுங்க வைக்கும் கம்யூனிஸ்ட்கள்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கை மோதலை விட நடிகை சரிதா நாயர்தான் மிகப் பெரிய ஆயுதமாக மாறியுள்ளார் எதிர்க்கட்சிகளுக்கு.

காங்கிரஸை களத்தில் சாய்க்க முக்கிய எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டுகள் கையில் எடுத்துள்ள விவகாரம் சோலார் பேனல் ஊழல் புகழ் சரிதா நாயர்தான்.

அவரை மையமாக வைத்து காங்கிரஸை கலாய்த்தும், விமர்சித்தும் போஸ்டர்கள் ஒட்டி மாநிலத்தையே ரணகளப்படுத்தி வருகின்றனராம் தோழர்கள்.

கேரள அரசியலை நிலை குலைய வைத்தவர்

கேரள அரசியலை நிலை குலைய வைத்தவர்

நடிகை சரிதா நாயர், கேரள அரசியல் கட்சிகளை நிலை குலைய வைத்த பிரபலம். பிரபலமான சோலார் பேனல் ஊழல் வழக்கில் இவரும் ஒரு முக்கிய அங்கம் ஆவார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியங்கள் இவர் வசம்

காங்கிரஸ் கட்சியின் முக்கியங்கள் இவர் வசம்

காங்கிரஸ் கட்சியின் பல முக்கியப் பிரபலங்கள் சரிதாவால் பல வகையில் ஆதாயம் அடைந்ததாகவும், பாலியல் ரீதியிலான பல அனுகூலங்களை அடைந்ததாகவும் பரபரப்பு கிளம்பியது.

ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ

ஹோட்டலில் வைத்து பலாத்காரம் செய்த எம்.எல்.ஏ

அதை விட முக்கியமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ அப்துல்லா குட்டி என்பவர் சரிதாவை ஹோட்டலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த விவகாரமும் அங்கு அதிர்ச்சியூட்டியது.

மத்திய அமைச்சருடன் நெருக்கமாக

மத்திய அமைச்சருடன் நெருக்கமாக

அப்துல்லா குட்டி விவகாரத்தை விட ஹாட்டான விஷயம், மத்திய அமைச்சர் வேணுகோபாலுடன், சரிதா நாயர் நெருக்கமாக இருந்ததாக வெளியான செய்திதான்.

இதை வச்சே...

இதை வச்சே...

இப்போது வேணுகோபாலும், சரிதாவும் நெருக்கமாக இருக்கும் படத்தையே போஸ்டராக்கி கேரளாவையே நடுங்க வைத்து வருகிறார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

பதறிப் போயுள்ள காங்கிரஸ்

பதறிப் போயுள்ள காங்கிரஸ்

கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த போஸ்டர் போரால் காங்கிரஸ் கட்சியினர் பதறிப் போயுள்ளனராம்.

இது தவறு...தடை கோரும் சரிதா நாயர்

இது தவறு...தடை கோரும் சரிதா நாயர்

இதற்கிடையே, சரிதா நாயர் இந்த போஸ்டர்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்டா் கட்சியினரும், பிற அரசியல்வாதிகளும் என்னைப் பகடைக்காயாக்கி வருகின்றனர். இந்த போஸ்டரை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+