சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூருக்கு முன்ஜாமீன்
சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சசி தரூருக்கு முன்ஜாமீன் கிடைத்துள்ளது.
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரண விவகாரத்தில் சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
மத்திய முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கா் கடந்த 2104-ஆம் ஆண்டு ஜனவரி 17-ல் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி அறையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக டெல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், போலீஸ் தரப்பில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுனந்தாவை தற்கொலைக்கு சசி தரூா் தூண்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும், சுனந்தாவுக்கு அவா் கொடுமை செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இதுதொடா்பாக அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
அதன்படி வரும் 7-ஆம் தேதி அவா் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் சசி தரூரை போலீஸாா் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோர மனு தாக்கல் செய்தார்.
அதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் சசி தரூருக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டது. ரூ. 1 லட்சம் பிணைத் தொகையாக செலுத்துமாறு சசி தரூருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications