ஜெ.சமாதியில் 3 முறை ஓங்கி அடித்து சபதம் போட்டுவிட்டு பெங்களூரு சிறைக்கு போன சசிகலா-ப்ளாஷ்பேக்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா 234 நாட்களுக்குப் பின்னர் இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
Recommended Video

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்றுள்ள சசிகலா 234 நாட்களுக்குப் பின்னர் இன்று சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
இவரது கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்தார்.15 நாட்கள் பரோல் கேட்ட சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாட்கள் வழங்கியுள்ளது. சசிகலா வரும் 10ஆம் தேதி மீண்டும் சிறைக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூவத்தூர் முதல் பெங்களூரு சிறைவாசம் வரையிலான ப்ளாஷ்பேக்:

முதல்வர் பதவி வெறி
ஆட்சி அரியணையில் அமர ஆசைப்பட்ட சசிகலா தனக்கு ஆதரவாக வாக்களிக்க எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்தார். சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு முந்தைய நாளான பிப்ரவரி 13-ந் தேதி சசிகலாவும் அங்கேயே தங்கினார். அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூருக்கு போய் வந்து கொண்டிருந்தார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா காலமானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைவாசம் அனுபவிப்பது உறுதியானது.

ஓங்கி அடித்து சபதம் போட்ட சசி
சிறை தண்டனையை அனுபவிக்க பிப்ரவரி 15-ந் தேதி பெங்களூரு புறப்பட்டார் சசிகலா. முன்னதாக மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அப்போது 3 முறை சமாதியில் ஓங்கி அடித்து சபதம் செய்தார் சசிகலா.

தடாலடி தியானம்
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமாபுரம் சென்றார் சசிகலா. அங்குள்ள எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்ற சசிகலா எம்ஜிஆரின் படத்தை தொட்டு வணங்கினார். பின்னர் தரையில் அமர்ந்து கண்களை மூடி அவர் தியானம் மேற்கொண்டார்.

கதறி அழுத சசி
அன்று மாலை பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றார் சசிகலா. சிறையில் அடைக்கப்படும் முன்பு கணவர் நடராஜனை சசிகலா கட்டிப்பிடித்து கதறினார்.

சிறையையே சொகுசு ஹோட்டலாக்கிய சசி
சசிகலா சிறையில் ஸ்டார் ஹோட்டலைப் போன்ற வசதியை பெற்றுள்ளதாக சிறைத்தறை ஜூலை 13-ந் தேதி டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். தனி சமையல் அறை, பார்வையாளர் அறை, ரோலிங் சேர், தொலைக்காட்சி அறை என சகல வசதிகளையும் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டினார்.

அதிர்வை தந்த ஷாப்பிங் வீடியோ
சசிகலாவும் இளவரசியும் பெங்களூரு சிறையில் இருந்து ஷாப்பிங் சென்று விட்டு திரும்பியது, சசிகலா பயன்படுத்திய அறைகளின் வீடியோக்கள் ஜூலை 17-ல் வெளியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

5 நாட்கள் பரோல்
இந்நிலையில் 234 நாட்களுக்குப் பின்னர் சிறையில் இருந்து இன்று வெளியே வருகிறார் சசிகலா. கணவர் நடராஜனை காண 5 நாட்கள் பரோலில் வருகிறார் சசிகலா.












Click it and Unblock the Notifications